லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ விருப்பம்… ரைசாவின் பளிச் பதில் !
சென்னை : நடிகை ரைசா வில்சன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ விரும்புவதாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.
மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டுள்ள ரைசா 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றி பெற்றார்.
2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம்
சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி செந்தில் அளித்த தவறான சிகிச்சையால் முகம் வீங்கியதாக நடிகை ரைசா வில்சன் குற்றம் சாட்டி இருந்தார்.

பிக் பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். அதன் பின் பின், பியார் பிரேமா காதல்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப்படம் படம் வெற்றியடைந்ததால் காதலிக்க யாருமில்லை' போன்ற சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். நடிகை என்பதைத் தாண்டி மாடலிங்கிலும் எப்போதும் பிஸியாக இருக்கிறார் ரைசா.

பிகினி போட்டோ வேண்டும்
எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். . அப்போது பிகினி புகைப்படத்தை கேட்ட ரசிகருக்கு ரைசா பிகினி புகைப்படத்தை அனுப்பினார்.

இதோ பாருங்க
மேலும் ரைசாவின் தீவிரரசிகர் ஒருவர், கவர்ச்சியான புகைப்படம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதோ பாருங்க கவர்ச்சி படம் என்று, ரைசா குறும்பு செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

காதல் இல்லையே
மற்றொரு ரசிகர், லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் விருப்பம் இருக்கா என்று கேட்டுள்ளார். அதற்கு ரைசா, லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் எனக்கு ஓகே தான், ஆனால், அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே ? அது இல்லாமல் நான் என்ன செய்ய முடியும்? அதனால், அந்த வாழ்க்கையை கற்பனை செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ரைசாவின் இந்த கலந்துரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல திரைப்படங்களில் பிஸியாக
நடிகை ரைசா வில்சன் தற்போது, தி சேஸ், எஃப்.ஐ.ஆர், சூர்ப்பனகை உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், தி சேஸ் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் அனைவரும் வியந்து போகும் அளவிற்கு நடித்து முடித்துள்ளார். மேலும், பிரபுதேவா ஜோடியாக பொய்க்கால் குதிரை படத்திலும் நடித்து வருகிறார் ரைசா.


Click it and Unblock the Notifications











