»   »  குமுதவள்ளிக்காக உதவி இயக்குனர் செய்ய வேண்டிய வேலையை செய்த ரஜினி

குமுதவள்ளிக்காக உதவி இயக்குனர் செய்ய வேண்டிய வேலையை செய்த ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தில் உதவி இயக்குனர்கள் செய்யும் வேலையை ரஜினிகாந்த் செய்தது தெரிய வந்துள்ளது.

அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் நடிகை ராதிகா ஆப்தே கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். ரஜினியுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்று பல நடிகைகள் கூறி வரும் நிலையில் ராதிகாவுக்கு கபாலி வாய்ப்பு கிடைத்தது சிலருக்கு வயிற்றெரிச்சலை கூட ஏற்படுத்தியது.


இந்நிலையில் கபாலி படப்பிடிப்பின்போது நடந்த சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது.


மராத்தி

மராத்தி

சூப்பர் ஸ்டாரை போன்றே ராதிகா ஆப்தேவுக்கும் மராத்தி தான் தாய் மொழி. அதனால் ராதிகா ரஜினியை முதல் முறையாக பார்த்தபோதே மராத்தியில் பேசியுள்ளார்.


ராதிகா

ராதிகா

கபாலி படத்தில் நடிக்கும்போது ரஜினியும், ராதிகா ஆப்தேவும் மராத்தி அல்லது ஆங்கிலத்தில் பேசி வந்துள்ளனர். ராதிகாவுக்கு தமிழ் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி

ரஜினி

படப்பிடிப்பு தளத்தில் ரஞ்சித் கூறியவற்றை எல்லாம் ரஜினி தான் தனக்கு மராத்தியில் மொழி பெயர்த்ததாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். எவ்வளவு பெரிய ஸ்டார் அவர் தனக்காக மொழி பெயர்த்ததை ராதிகா பெருமையாக கூறியுள்ளார்.
உதவி இயக்குனர்கள்

உதவி இயக்குனர்கள்

வழக்கமாக தமிழ் தெரியாத நடிகைகளுக்கு இயக்குனர் கூறுபவற்றை உதவி இயக்குனர்கள் தான் மொழி பெயர்ப்பார்கள். கபாலி படப்பிடிப்பின்போது அந்த வேலையை ரஜினியே செய்துள்ளார்.


English summary
Actress Radhika Apte said that Rajinikanth used to translate Pa. Ranjith's directions to her while shooting for Kabali.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil