»   »  ரஜினி எனக்கு ஆன்மீக குரு மாதிரி!- தன்ஷிகா

ரஜினி எனக்கு ஆன்மீக குரு மாதிரி!- தன்ஷிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆன்மீகத்தில் ரஜினி சார் எனக்கு குரு மாதிரி என்கிறார் கபாலியில் நடிக்கும் நடிகை தன்ஷிகா.

கபாலியில் ரஜினியுடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தன்ஷிகா. இந்தப் படத்தில் நடிக்கும்போது ரஜினியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.


Rajini is my spiritual Guru, says Dhanshika

அவர் கூறுகையில், "கபாலி ஷூட்டிங் சமயங்களில் ரஜினி சாருடன் ஆன்மிகம் பற்றி நிறைய பேசுவேன். அவருக்கு அதில் தெளிவும், அனுபவமும், ஞானமும் நிறைய.


எனக்கும் ஆன்மீக ஈடுபாடு எப்போதும் உண்டு, வழிகாட்டி இருந்ததில்லை. அந்தக் குறை இப்போ தான் தீர்ந்தது. ஆன்மிக விஷயங்களில் எனக்குள்ள சந்தேகங்களை ரஜினி சார் தீர்த்து வைக்கிறார். எனது ஆன்மீக குரு அவர்தான்,' என்றார்.


இந்தப் படத்தில் ரஜினியின் மகளாக நடிக்கும் தன்ஷிகா, ஒரு பெண் டானாக வருகிறாராம்.


இதுபற்றிக் கேட்டால், "கொஞ்ச நாள் பொருத்துக்குங்க. இப்பவே எல்லாத்தையும் சொல்லிட்டா சுவாரஸ்யம் இருக்காதே," என்றார்.

English summary
Actress Dhanshika is sharing her experience with Rajinikanth during Kabali shoot.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil