»   »  ரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை! ராதிகா ஆப்தே

ரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை! ராதிகா ஆப்தே

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை, அன்பானவரை நான் திரையிலும் சரி, நிஜத்திலும் சரி... பார்த்ததே இல்லை என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

கபாலியில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. அதற்கு முன் தமிழில் மூன்று படங்களில் நடித்திருந்தார். சில தெலுங்குப் படங்களிலும், ஏராளமான இந்திப் படங்களிலும் அவர் நடித்திருந்தார். பல சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்து பரபரப்பு கிளப்பிய ராதிகா ஆப்தே, சமீபத்தில் தன்னிடம் சிலுமிஷம் செய்த தெலுங்கு ஹீரோ ஒருவரை அறைந்துவிட்டதாகக் கூறி அதிர வைத்தார். அந்த நடிகர் தெலுங்கு சினிமாவில் அதிகாரமிக்கவர் என்றும் அடையாளம் காட்டினார்.

Rajinikanth, the niciest human, says Radhika Apte

இந்த நிலையில் கபாலியில் நடித்த அனுபவம் குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் கபாலி. குறிப்பாக ரஜினிகாந்த். மிக அருமையான, அற்புதமான மனிதர் அவர். இப்படி ஒருவரை நிஜத்திலும் சரி, திரையிலும் சரி நான் சந்தித்ததே இல்லை. அவரது படப்பிடிப்பு மாதிரி ஒழுங்கான பாதுகாப்பான படப்பிடிப்புகள் அரிது," என்று கூறியுள்ளார்.

English summary
Kabali heroine Radhika Apte says that Rajinikanth is the nicest and wonderful human being whom she met ever.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X