»   »  சன்னி போன்று நான் ஆபாச நடிகை இல்லை: சென்சார் போர்டை மிரட்டும் ராக்கி

சன்னி போன்று நான் ஆபாச நடிகை இல்லை: சென்சார் போர்டை மிரட்டும் ராக்கி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது ஏக் கஹானி ஜூலி கி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டை விளாசியுள்ள நடிகை ராக்கி சாவந்த் சன்னி லியோனையும் வம்புக்கு இழுத்துள்ளார்.

குத்தாட்ட நடிகையாக இருந்த ராக்கி சாவந்த் ஏக் கஹானி ஜுலி கி படம் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு முதலில் யு/ஏ சான்றிதழ் அளித்த சென்சார் போர்டு பின்னர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இது குறித்து அறிந்த ராக்கி சென்சார் போர்டு மீது கோபத்தில் உள்ளார். அவர் சான்றிதழ் பற்றி கூறுகையில்,

சென்சார் போர்டு

சென்சார் போர்டு

பெரிய நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்குவதை தவிர வேறு எதுவும் செய்யாமல் இருக்கும் சென்சார் போர்டை இழுத்து மூட வேண்டும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

சென்சார் போர்டு தலைவர் பஹ்லஜ் நிஹலானியின் வீட்டிற்குள் புகுந்து அவரை அந்த பதவியில் இருந்து நீக்காமல் விட மாட்டேன். சென்சார் போர்டில் இருப்பவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். நிஹலானிக்கு ஒன்றும் தெரியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்யட்டும். நான் அவரது வேலையை சிறப்பாக செய்வேன்.

பணம்

பணம்

நாங்கள் பணம் கொடுக்காததால் எங்கள் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்களா அல்லது நான் நடித்திருப்பது தான் காரணமா? ஒரு குத்தாட்ட நடிகை ஹீரோயின் ஆனதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆபாச நடிகை

ஆபாச நடிகை

நான் ஒன்றும் வெளிநாட்டில் இருந்து வரவில்லை. நான் ஆபாச பட நடிகை இல்லை. கண்ட கண்ட்றாவியை எல்லாம் காட்டி ஆபாச நடிகை நடித்த ஏக் பஹேலி லீலா படத்திற்கு எல்லாம் யு/ஏ சான்றிதழ் வழங்கினர். ஆனால் நான் ஆபாச படத்தில் நடிக்காமல் என் படத்திற்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

பாடம்

பாடம்

நான் சென்சார் போர்டுக்கு பாடம் கற்பிக்கப் போகிறேன். சென்சார் போர்டு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்.

English summary
Bollywood actress Rakhi Sawant has threatened censor board and its chairman Pankaj Nihalani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil