»   »  மறுபடியும் ஒரு சுயம்வரம் வச்சா நல்லாருக்கும்... ஏங்கும் ராக்கி!

மறுபடியும் ஒரு சுயம்வரம் வச்சா நல்லாருக்கும்... ஏங்கும் ராக்கி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் வந்த நடிகை ராக்கி சாவந்த், மீண்டும் ஒரு சுயம்வரம் நடத்த தான் ஆர்வமாக இருப்பதாக கூறி கூடியிருந்தவர்களை கலகலக்க வைத்தார்.

பிரிக்க முடியாதது எதுவோ என்ற கேள்வியை யாராவது போய் ராக்கியிடம் கேட்டால், நானும், ராஜஸ்தானும் என்பார். அந்த அளவுக்கு ராஜஸ்தானுடன் ராக்கிக்கு ஒட்டுதல் அதிகம். அடிக்கடி ஷூட்டிங்குக்காக வருவார். இப்போதும் கூட ஜெய்ப்பூர் வந்திருந்தார். ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக.

ராணி மகாராணி

ராணி மகாராணி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராஜஸ்தானுக்கு வரும்போதெல்லாம் எனக்குள் நான் ஒரு ராணி என்ற உணர்வே ஏற்படுகிறது. உண்மையில் நான் பாலிவுட்டின் ராணிதான்.

மெதப்பு

மெதப்பு

ஆனால் இந்த மாநிலத்திற்கு வந்தால் தனி மெதப்பு வந்து விடுகிறது. இங்குள்ள மக்களின் அன்பு, விருந்தோம்பல் எல்லாமே நம்மை மிதக்க வைத்து விடுகின்றன. எனவே ராஜா அல்லது ராணி என்ற உணர்வு வருவதைத் தவிர்க்க முடியாது என்றார்.

ராக்கி கா சுயம்வர்

ராக்கி கா சுயம்வர்

ராக்கிக்கும், ராஜஸ்தானுக்கும் இன்னொரு நெருக்கமான நட்பும் உண்டு. அதாவது உதய்ப்பூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராக்கி கா சுயம்வர் என்ற டிவி சுயம்வர நிகழ்ச்சிக்காக இங்குதான் தங்கியிருந்தார் ராக்கி.

பழைய நெனப்புடா பேராண்டி

பழைய நெனப்புடா பேராண்டி

அதுகுறித்த நினைவுகளை கிளறி விட்டபோது ராக்கியிடம் புன்னகை பூத்தது. அவர் கூறுகையில், அந்த ஷோவுக்காக இங்கு தங்கியிருந்தது மிகவும் அருமைாயன நாட்கள். மீண்டும் இங்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

மறுபடியும் வர வேண்டும்

மறுபடியும் வர வேண்டும்

மறுபடியும் உதய்ப்பூர் வர வேண்டும். மீண்டும் சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்ன ஒரு நகரம். என்ன அருமையான ஏரிகள், அரண்மனைகள்.

ரொமான்டிக் சிட்டி

ரொமான்டிக் சிட்டி

உதய்ப்பூர், ஜெய்ப்பூர் என எந்த நகரமாக இருந்தாலும் எங்கு போனாலும் ரொமான்ஸ், ரொமான்ஸ்தான்.. மறக்க முடியாத அனுபவம் என்று சிலாகித்தார் ராக்கி...!

டிரஸ் வாங்கலியோ டிரஸ்

ராஜஸ்தானிலிருந்து கிளம்புவதற்கு முன்பு நிறைய டிரஸ் பர்ச்சேஸ் செய்ய திட்டமிட்டிருந்தாராம் ராக்கி. மறக்காம எல்லாத்தையும் வாங்கியிருப்பார் என்று நம்பலாம்

English summary
Actress Rakhi Sawant, who visited Rajasthan has expressed her wisht to be back here for anothe Swaymvar TV show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil