»   »  ரக்சிதாவின் 'நிஜம்'

ரக்சிதாவின் 'நிஜம்'

Subscribe to Oneindia Tamil


தமிழுக்கு வந்து பின்னர் கன்னடத்துக்குத் தாவி அங்கிருந்து தெலுங்கிலும் கலக்கும் ரக்சிதா, தெலுங்கில் நடித்துள்ள நிஜம் என்ற படம் தற்போது அதே பெயரில் தமிழுக்கு டப் ஆகி வருகிறது.

Click here for more images

தம் படம் தமிழுக்கு வந்தவர் ரக்சிதா. இப்படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியைப் பார்த்து ரசிகர்கள் லயித்துப் போனார்கள். ஆனால், தயாரிப்பாளர்களுக்குத்தான் ரக்சிதா மீது ஈர்ப்பு வரவில்லை. இதனால் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு வரவில்லை.

மதுர படத்தில் விஜய்யுடன் கிளாமரில் கலக்கினார். அத்தோடு முடிந்தது ரக்சிதாவின் தமிழ் திரையுலக அனுபவம். இதையடுத்து தாயகமான கன்னடத்துக்குக் கிளம்பினார்.

அங்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தாதல் தொடர்ந்து கன்னடத்திலேயே நடித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது தெலுங்குக்குப் போய் வருவார். அப்படி தெலுங்கில் நடித்த படம்தான் நிஜம்.

மகேஷ்பாபு ஹீரோவாக நடித்த அப்படத்தில் ரக்சிதாவுடன், ஷகீலாவும் கிளாமரில் கலக்கியிருந்தார். காமெடி கலந்த கிளாமர் வேடத்தில் ஷகீலாவும் அப்படத்தில் பேசப்பட்டார்.

இப்போது இப்படத்தை தமிழுக்குக் கொண்டு வருகின்றனர். டப் ஆகி வரும் இப்படத்தை நிஜம் என்ற பெயரிலேயே கொண்டு வருகின்றனர்.

ஷகீலாவின் கிளாமரும் காமெடியும் சிறப்பாக வந்திருந்ததால் இப்படத்தை மலையாளத்திற்கும் கொண்டு போகின்றனர். யதார்த்தம் என்ற பெயரில் நிஜம், மலையாளம் பேசப்போகிறது.

சமீபகாலமாக டப்பிங் படங்கள் தமிழில் தலை தூக்க ஆரம்பித்து விட்டன. ஆங்கிலப் படங்கள்தான் என்றில்லாமல் ஏராளமான தெலுங்குப் படங்களும் டப் ஆகி தமிழைக் கலக்க ஆரம்பித்துள்ளன. அந்த வரிசையில் நிஜமும் தமிழ் பேச வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் டப்பிங்காக இருந்தாலும் ரக்சிதா, ஷகீலாவின் 'கலக்கல்' ஒரிஜினலாக இருக்கும் என்று தைரியமாக நம்பலாம்!

Read more about: dhum, fans, glamour, producers, rakshida, shakeela
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil