»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்புவுடன் தம் படத்தில் அறிமுகமானாரே ரக்ஷிதா, நினைவிருக்கிறதா?

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழுக்கு வரப் போகிறார். பெங்களூரைச் சேர்ந்த ரக்ஷிதாகன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். தம் மூலம் தமிழுக்கு வந்து கவர்ச்சி மழைபொழிந்தவரை தெலுங்கு கொத்திக் கொண்டு போய்விட்டது.

அங்கு வரைமுறை ஏதுமில்லாமல் இவர் கவர்ச்சித் துள்ளல் போட, சொக்கிப் போய் தங்களதுபடங்களில் இழுத்துக் கொண்டார்கள் முன்னணி ஹீரோக்கள். கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுடனும்ஒரு சுற்று வந்துவிட்ட ரக்ஷிதாவுக்கு இப்போது அங்கு கொஞ்சம் இறங்குமுகம்.

உடனே தனது தமிழ்த் தொடர்புகளையும் கன்னட திரையுலக தொடர்புகளையும அலர்ட்செய்துவிட்டார். கன்னடத்தில் கைமேல் பலன் கிடைத்துவிட்டது. பல படங்களில் பிஸியாகிவிட்டார்ரக்ஷிதா.

ஆனால், தெலுங்குக்கு இணையான டப்பு கிடைக்குமிடம் தமிழ் தான் என்பதால், தேடலைத்தீவிரமாக்கி உழைக்க, இரண்டு படங்கள் கிடைத்துள்ளன.

அதில், ஒரு படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில்துள்ளிக் கொண்டிருக்கிறார். கவர்ச்சி காட்டுவதற்காக ஏகத்துக்கும் குண்டுபோட்டுவிட்டரக்ஷிதாவை உடம்பை கொஞ்சம் குறைக்கச் சொல்லியிருக்கிறதாம் விஜய் படத்தின் யூனிட்.

இந் நிலையில் சரத்குமாருடனும் ஜோடி சேரப் போகிறார் ரக்ஷிதா. அந்தப் படத்தின் பெயர் சத்ரபதி.இதில் சரத்குமாரின் உள்ளத்தை சமீபகாலமாக கொள்ளை கொண்டுள்ள நமிதாவும் நடிக்கிறார்.

முதலில் ரக்ஷிதா மட்டுமே நடிப்பதாக இருந்தது. ஆனால், நமிதாவும் இடையில் புகுந்து ஒரு ரோல்வாங்கிவிட்டாராம். படத்தில் இந்த இருவருக்கும் இடையே கிளாமர் காட்டுவதில் நல்ல போட்டிஇருக்கப் போவது மட்டும் நிச்சயம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil