»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கன்னடத்தில் அப்பு, தெலுங்கில் இடியட் ஆகிய பெயர்களில் உருவான படம் தான் தமிழில் தம் என்ற பெயரில்உருவாக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் ராஜ்குமாரின் மகன் புனித்துடன் அப்புவில் நடித்து, அதன் தெலுங்கு ரீமேக்கான இடியட்டிலும்ஹீரோயினாக நடித்த ரக்ஷிதா தான் இப் படத்தின் தமிழ் ரீ-மேக்கான தம்மிலும் ஹூரோயின். இந்தப் படத்தில்இவர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதன் மூலம் ஒரே படத்தின் மூன்று ரீமேக்குகளிலும் நடிக்கும் ஹீரோயின் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்ரக்ஷிதா.

ஒரு லோக்கல் தாதாவுக்கும் போலீஸ் கமிஷ்னர் மகளுக்கும் ஏற்படும் காதல் தான் கதை.

இதில் சிம்பு தான் தாதா (சிரிக்காதீர்கள்). தமிழ்ப் புத்தாண்டில் இப் படம் வெளிவருகிறது.

கன்னடத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில் ரக்ஷிதாவுக்கு ஏகப்பட்ட சான்ஸ்கள் குவிந்து கொண்டுள்ளனவாம்.காரணம் தெலுங்கில் தனது முதல் படமான இடியட்டில் இவர் காட்டிய கவர்ச்சி தான். டைரக்டர் எள் என்றால் இவர்உடைகளைத் தூக்கி எறிந்துவிட்டு எண்ணெய்யாக நின்றாராம்.

தனது தமிழ் படமும் ரிலீஸ் ஆகிவிட்டால் இங்கும் நிறைய வாய்ப்புக்கள் வரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.

பெங்களூரைச் சேர்ந்த இவரது தந்தை கன்னட சினிமாவில் கொஞ்சம் பிரபலமான ஒளிப்பதிவாளர். அம்மா ஒருகெஸ்ட் ரோல் நடிகை.

ரஜினியின் நண்பரான கன்னட நடிகர் விஷ்ணு வர்த்தன் ரெகமண்டேஷனில் ஹீரோயின்ஆனவராம்.

உண்மைப் பெயர் சுவேதா. கவர்ச்சி காட்டுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதில் என் பெற்றோருக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லை. என்னிடம் இருப்பதைக் காட்டுகிறேன். இதில் தப்பு இருப்பதாக நினைக்கவில்லைஎன்கிறார்.

வழக்கம் போல எல்லா நடிகைகளையும் போல அகதா கிரிஸ்டி படிப்பேன், சிட்னி ஷெல்டன் என்றால் உயிர்என்கிறார். படித்ததெல்லாம் மும்பையிலாம். கேர்ள் பிரண்ட்சைவிட பாய் பிரண்ட்ஸ் தான் அதிகமாம்.

என்னிடம் எனக்கு ரொம்ப பிடித்தது என் கண்கள் தான் என்கிறார்.

Read more about: actors, actress, cinema, mumtaj, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil