»   »  ரெட்டி மகளின் திருமணத்தில் ஆடி 'ஐடி' வலையில் தானாக விழுந்த நடிகை ராகுல் ப்ரீத் சிங்?

ரெட்டி மகளின் திருமணத்தில் ஆடி 'ஐடி' வலையில் தானாக விழுந்த நடிகை ராகுல் ப்ரீத் சிங்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சுரங்க மாபியா ஜனார்தன ரெட்டி மகளின் திருமணத்தில் நடனம் ஆடிய நடிகை ராகுல் ப்ரீத் சிங்கிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டு மக்கள் சில்லறை கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கும்போது சுரங்க மாபியா ஜனார்தன ரெட்டியின் மகளின் திருமணம் ரூ. 500 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக பெங்களூரில் நடைபெற்றது.

அந்த திருமண விழாவில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடனம் ஆடினார்.

ரூ. 1 கோடி

ரூ. 1 கோடி

ஜனார்தன ரெட்டி மகளின் திருமண விழாவில் ஆடிய ஒரே நடிகை ராகுல் ப்ரீத் சிங். இதற்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ. 1 கோடி. ராகுல் படம் ஒன்றுக்கு வாங்கும் சம்பளத்தை ரெட்டி விழாவில் ஆட வாங்கியுள்ளார்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

சுரங்க ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்று வந்த ரெட்டி தனது மகளின் திருமணத்திற்கு ஏராளமான திரையுலக பிரபலங்களை அழைத்திருந்தார். ஆனால் வம்பு எதற்கு என்று பலர் வரவில்லை.

ஐடி நோட்டீஸ்

ஐடி நோட்டீஸ்

ரெட்டி மகளின் திருமணம் முடிந்த கையோடு அவரது அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். இந்நிலையில் ராகுல் ப்ரீத்துக்கும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராகுல்

ராகுல்

ரெட்டி வீட்டு விழாவில் ஆடியதற்காக ராகுல் ப்ரீத் சிங்கிற்கு வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் எதுவும் வரவில்லை என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
According to reports, IT department has sent notice to actress Rakul Preet Singh for performing at Janardhana Reddy's daugher's wedding.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil