»   »  இவ நடிச்சா படம் ஊத்திக்கும்னு சொன்னாங்க: நடிகை ராகுல் ப்ரீத் சிங்

இவ நடிச்சா படம் ஊத்திக்கும்னு சொன்னாங்க: நடிகை ராகுல் ப்ரீத் சிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தான் சில படங்களில் நடிக்காமல் போனது நல்ல வேளை என்று நடிகை ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

தடையற தாக்க படம் மூலம் கோலிவுட் வந்தவர் பஞ்சாபி பொண்ணான ராகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் அவர் நடித்த படங்கள் ஓடவில்லை.

இந்நிலையில் அவர் படங்கள் குறித்து கூறுகையில்,

அதிர்ஷ்டமில்லை

அதிர்ஷ்டமில்லை

சினிமாவில் யார் நிலைமை எப்பொழுது எப்படி ஆகும் என்றே கூற முடியாது. கடந்த ஆண்டு 3 படங்கள் தோல்வி அடைந்தன. உடனே என்னை அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று கூறி ஒதுக்கினார்கள். ராகுல் ப்ரீத் நடித்தாலே அந்த படம் ஊத்திக்கொள்ளும் என்றார்கள்.

போராட்டம்

போராட்டம்

அதிர்ஷ்டமில்லாதவள் என்று கூறி ஒதுக்கியதால் நான் துவண்டு போகவில்லை. நம்பிக்கையோடு நடித்தேன். அதன் விளைவாக அண்மையில் வெளியான என் படங்கள் ஹிட்டாகியுள்ளன.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

தமிழ் மற்றும் தெலுங்கில் எனக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. என்னை அதிர்ஷ்டமில்லை என்று கூறி ஒதுக்கியவர்களே தற்போது என்னை தேடி வருகிறார்கள். தற்போது வெளியாகி தோல்வி அடைந்த பல படங்கள் என்னை தேடி வந்தவை. அவற்றில் நடிக்க மறுத்தேன்.

குழந்தைகள்

குழந்தைகள்

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். அவர்களின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்டுள்ளேன். மேலும் பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறேன்.

English summary
Actress Rakul Preet Singh is happy about her choices in film industry. She wants to adopt more orphans and takes care of them.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil