என்னோட பிறந்தநாள் கிஃப்ட் இவர் தான்...காதலரை அறிமுகம் செய்த ரகுல்ப்ரீத் சிங்

சென்னை : தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர்களில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் இன்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரகுல் ப்ரீத் சிங்குடன் நடித்த தென்னிந்திய டாப் ஹீரோக்களான மகேஷ் பாபு, சூர்யா, கார்த்தி, ராம்சரண், ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து கூறி உள்ளனர்.

2009 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி படத்தின் மூலம் ஹீரோயின் ஆன ரகுல் ப்ரீத் சிங், தமிழில் யுவன் படத்தின் மூலம் அறிமுகமானார். பல படங்களில் நடித்து விட்ட ரகுல் ப்ரீத் சிங், தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், கமல் நடிக்கும் இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது தவிர பல இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

காதலரை காட்டிய ரகுல் ப்ரீத்

காதலரை காட்டிய ரகுல் ப்ரீத்

இந்நிலையில் தனது பிறந்தநாளான இன்று தனது காதலரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங், இவர் வேறு யாரும் இல்லை பிரபல தயாரிப்பாளர் வாசு பகுனானியின் மகன் ஜாக்கி பகுனானி தான். இவரும் ஒரு நடிகர் தான். நடிகராக இருந்தாலும் இந்தியில் பல படங்களை தயாரித்து வருகிறார்.

அட அவரா இவர்

அட அவரா இவர்

ஜாக்கி, தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் தான். தமிழில் த்ரிஷா நடித்து 2018 ம் ஆண்டு வெளியான மோகினி படத்தில் ஹீரோவாக நடித்தவர் இவர் தான். இவரை தான் காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோவுடன், கேப்ஷன் பதிவிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

 என்னோட பெரிய கிஃப்ட்

என்னோட பெரிய கிஃப்ட்

அதில் அவர், Thank you my love. எனக்கு இந்த ஆண்டின் மிகப் பெரிய கிஃப்ட் நீ. எனது வாழ்க்கையை கலர்ஃபுல் ஆக்கியதற்கு நன்றி. என்னை non stop ஆக சிரிக்க வைத்ததற்கும் நன்றி. உன்னை அடைந்ததற்கு மிக்க நன்றி. உன்னோடு இணைந்து பல நினைவுகள் உருவாகி உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்து விட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

வைரலாகும் ஃபோட்டோ

வைரலாகும் ஃபோட்டோ

காதலருடன் கைகோர்த்து நடந்து செல்லும் ஃபோட்டோவுடன் ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள இந்த பதிவு செம வைரலாகி வருகிறது. இதே ஃபோட்டோவை ஜாக்கி பகுனானியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோவுடன் அவர் பதிவிட்டுள்ள கேப்ஷனும் செம வைரலாகி வருகிறது.

உலகமே நீ தான்

உலகமே நீ தான்

ஜாக்கி தனது பதிவில், நீ இல்லாத நாட்கள், நாட்களாகவே இருக்காது. நீ இல்லாமல் சாப்பிடும் மிக சுவையான விருந்து கூட சந்தோஷம் தராது. எனக்கு உலகமாக இருக்கும் மிக அற்புதமான உயிருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளும் புன்னகையுடன் விடியும் உனது நாட்கள் அழகாக இருக்கட்டும். Happy Birthday my love என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X