»   »  நடிகைகள் அட்ஜஸ் செய்யணும், அடம்பிடிக்கக் கூடாது: சொல்கிறார் கார்த்தி ஹீரோயின்

நடிகைகள் அட்ஜஸ் செய்யணும், அடம்பிடிக்கக் கூடாது: சொல்கிறார் கார்த்தி ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வசதிகள் கேட்டு நடிகைகள் அடம்பிடிக்காமல் அட்ஜஸ் செய்ய வேண்டும் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் படத்தின் நாயகி இவர் தான்.

இந்நிலையில் சினிமா பற்றி ரகுல் ப்ரீத் சிங் கூறியதாவது,

கஷ்டம்

கஷ்டம்

நான் நடிகையாகும் முன்பு கஷ்டப்பட்டுள்ளேன். பசியால் அவதிப்பட்டுள்ளேன். அனைத்து சூழலையும் எதிர்கொண்டது தற்போது சினிமா உலகில் தாக்குப்பிடிக்க உதவியாக உள்ளது.

அமைதி

அமைதி

பசி, தூக்கமில்லாமல் இருந்தது தற்போது சினிமாவில் உதவுகிறது. பிரச்சனை வந்தால் டென்ஷன் ஆகாமல் அமைதியாக யோசித்து தீர்வு காணும் பக்குவம் வந்துள்ளது.

ஷூட்டிங்

ஷூட்டிங்

சினிமா ஷூட்டிங் சில நேரம் காடுகள், குக்கிராமங்களில் நடக்கும். அங்கு தங்க இடம், சுவையான சாப்பாடு இருக்காது. அதற்காக நான் வசதி இல்லை என்று சண்டைக்கு பாயமாட்டேன்.

அட்ஜஸ்

அட்ஜஸ்

இருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் இடம் கிடைத்தாலும் போதும் என்று படுத்து தூங்குவேன். காடுகளில் ஷூட்டிங் நடக்கும்போது நடிகைகள் கேரவன் கேட்டு அடம்பிடிக்கக் கூடாது. இருப்பதை கொண்டு அட்ஜஸ் செய்ய வேண்டும் என்றார் ரகுல் ப்ரீத் சிங்.

English summary
Rakul Preet Singh has advised fellow actresses to adjust with the given facilities and not to ask for more during shooting in forest areas.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil