»   »  அள்ளிக் கொடுத்தும் விஷால் படத்தில் இருந்து வெளியேறிய ராகுல் ப்ரீத் சிங்

அள்ளிக் கொடுத்தும் விஷால் படத்தில் இருந்து வெளியேறிய ராகுல் ப்ரீத் சிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷாலின் துப்பறிவாளன் படத்தில் இருந்து நடிகை ராகுல் ப்ரீத் சிங் வெளியேறியுள்ளார்.

மிஷ்கின் இயக்கி வரும் துப்பறிவாளன் படத்தில் நடிப்பதோடு அதை தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்தும் வருகிறார் விஷால். பிரசன்னா, அக்ஷரா ஹாஸன், வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கும் ராகுல் ப்ரீத் சிங்கை ஒப்பந்தம் செய்தார்கள்.

ராகுல் ப்ரீத் சிங்

ராகுல் ப்ரீத் சிங்

விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ராகுல் ப்ரீத் சிங் அதிக தொகையை சம்பளமாக கேட்டாராம். விஷாலும் அதை கேட்டு அதிர்ச்சி அடையாமல் கொடுக்க சம்மதித்துள்ளார்.

முடியாது

முடியாது

விஷால் அதிக சம்பளம் கொடுக்க சம்மதித்தும் ராகுல் ப்ரீத் சிங் துப்பறிவாளன் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். டேட்ஸ் பிரச்சனையால் வெளியேறியுள்ளாராம். அவருக்கு பதிலாக மலையாள படங்களில் நடிக்கும் அனு இம்மானுவேலை ஒப்பந்தம் செய்கிறார்களாம்.

மகேஷ் பாபு படம்

மகேஷ் பாபு படம்

ராகுல் ப்ரீத் சிங் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் கை நிறைய தெலுங்கு படங்கள் வைத்துள்ளார்.

சாமி 2

சாமி 2

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறாராம். படத்தில் த்ரிஷாவுக்கு முக்கிய கதாபாத்திரமாம்.

English summary
Rakul Preet Singh has walked out of Vishal's Thupparivalan citing dates issue. Malayalam actress Anu Immanuel is likely to take her place.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil