குட்டி பிரா.. வவ்வாலாக மாறிய ரகுல் ப்ரீத் சிங்.. அந்தரத்தில் எப்படி தொங்குறாரு பாருங்க மக்களே!

சென்னை: கொரோனா கலவரத்திலும் தனது ரசிகர்களுக்கு உடற்பயிற்சி மீது ஊக்கம் அளித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தொட்டில் போல துணியைக் கட்டிக் கொண்டு அந்தரத்தில் தலை கீழாக தொங்கியபடி ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரஸ் போல பரவி வருகிறது.

ஜிம்மே கதியென கிடந்த ரகுல் ப்ரீத் சிங், கொரோனா பாதிப்பு காரணமாக ஜிம்முக்கு போக முடியாத சூழலில் தனது வீட்டிலேயே, வித விதமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

வவ்வாலை போல

கொரோனா வைரஸ் பரவ வவ்வால் முக்கிய காரணமாக இருக்கும் என கருதப்பட்டு வரும் நிலையில், வவ்வாலை போல அந்தரத்தில் தலை கீழாக தொங்கியபடி நடிகை ரகுல் ப்ரீத் சிங் வொர்க்கவுட் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

குட்டி பிரா

குட்டி பிரா

என்னதான் வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டாலும், அதில் தனது ரசிகர்களை கவரும் விதமாக கிளாமர் கலந்து இருக்க வேண்டும் என்பதில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அந்தரத்தில் தொங்கும் அந்த புகைப்படத்தில், குட்டி பிரா அணிந்து, ரசிகர்களின் லைக்குகளை அள்ளியுள்ளார்.

உலக சுகாதார தினம்

உலக சுகாதார தினம்

ஏப்ரல் 7ம் தேதியான நேற்று உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது. கொரோனா பாதிப்பால் மக்கள் அல்லல் பட்டு வரும் நிலையில், பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் என தாங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

யூடியூப் பக்கம்

வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கும் நிலையில், அதனை மீண்டும் சில மாதங்கள் நீட்டிக்கும் திட்டத்தை மத்திய அரசு மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட சில மாநில அரசுகள் யோசித்து வருகின்றன. இதனால், நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனக்கான யூடியூப் பக்கத்தை உருவாக்கி, அதன் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க திட்டமிட்டுள்ளார்.

ஊர் சுற்ற முடியவில்லை

ஊர் சுற்ற முடியவில்லை

பட ஷூட்டிங் முடிந்தாலும், ஓய்வு தேவைப்பட்டாலோ அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறக்கும் பழக்கம் கொண்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு, இந்த குவாரண்டின் காலம் ரொம்பவே போர் அடிக்கிறதாம். ஊர் சுற்ற முடியவில்லை. ஷூட்டிங் செல்ல முடியவில்லை என பல நடிகைகள் புலம்புவதை போலவே இவரும் புலம்பி வருகிறார்.

இந்தியன் 2

இந்தியன் 2

என்னமோ ஏதோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களிலும், சூர்யாவுடன் என்.ஜி.கே படத்திலும் நடித்திருந்தார். தற்போது தமிழில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X