அந்த விஷயத்திற்கு நீங்க வேணாம்...காஜல் அகர்வாலுக்கு 'நோ' சொன்ன ராம்சரண்
சென்னை : தானே வலிய வந்து வருகிறேன் என சொன்ன பிறகும் காஜல் அகர்வாலிடம் கண்டிப்பாக நோ சொல்லி உள்ளார் ராம்சரண். இந்த விஷயம் காஜல் அகர்வாலுக்கு மிகப் பெரிய மன வருத்தத்தை தந்துள்ளதாம்.
Recommended Video
தமிழில் பழனி படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமான காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோயினாக உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வந்தார்.

சினிமாவிலிருந்து ஒதுங்கிய காஜல்
சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே கெளதம் கிட்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வந்த காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனால் நடிப்பிற்கு பிரேக் விட்டு, குடும்பத்தினருடன் பொழுதை செலவிட்டு வருகிறார். இருந்தாலும் தனது ரசிகர்களை ஏமாற்ற விரும்பாமல், கர்ப்ப கால போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

ஆச்சாரியா ப்ரொமோஷன்
இன்னும் சில மாதங்களில் காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறக்க போகிறது. இந்நிலையில் ராம் சரண், தனது அப்பா சிரஞ்சீவிவுடன் இணைந்து நடிக்கும் ஆச்சாரியா நடத்தில் காஜல் அகர்வாலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 29ம் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

காஜலுக்கு நோ சொன்ன ராம்சரண்
இதனால் தானும் ப்ரோமோஷனில் பங்கேற்க வரவா என ராம் சரணிடம் கேட்டுள்ளார் காஜல் அகர்வால். ஐதராபாத் வந்து இரண்டு பேட்டிகள் கொடுப்பதாக கேட்டுள்ளார். ஆனால் ராம் சரண் அதற்கு கண்டிப்பாக நோ சொல்லி விட்டாராம். காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக உள்ளதால் தான் ரிஸ்க் எடுத்த தயாராக இல்லை என சொல்லி விட்டாராம். காஜல் அகர்வாலே வருகிறேன் என்று சொன்ன பிறகும் ராம் சரண் அதற்கு மறுத்து விட்டாராம்.

இவர் போதும் எங்களுக்கு
இந்த படத்தில் ராம் சரண், சிரஞ்சீவியுடன் மற்றொரு ஹீரோயினாக நடித்துள்ள பூஜா ஹெக்டேவை வைத்து ப்ரொமோஷனை நடத்த ராம் சரண் பிளான் செய்துள்ளாராம். ஆச்சாரியா ப்ரொமோஷன் மட்டுமல்ல, அதோடு டைரக்டர் ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படத்தின் ஷுட்டிங்கிலும் ராம் சரண் செம பிஸியாக இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











