»   »  பொட்டியைக் கட்டினார் ரம்பா

பொட்டியைக் கட்டினார் ரம்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் சுத்தமாக வாய்ப்புகள் இல்லாததாலும், இந்தியில் சில வாய்ப்புகள் வந்துள்ளதாலும், சென்னைக்குகுட்பை சொல்லி விட்டு நடிகை ரம்பா மும்பையில் சொந்த வீடு வாங்கி குடியேறியுள்ளார்.

நடிகை திவ்யாபாரதி தமிழ் மற்றும் தெலுங்குப் படவுலகில் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருந்தபோது,திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவர் நடித்து பாதியில் நின்ற படங்களை முடித்துக்கொடுக்க அவரது சாயலில் இருந்த ரம்பாவை நாடியது திரையுலகம். அப்போது தெலுங்குத் திரையுலகில் குரூப்டான்சராக, கூட்டத்தோடு கூட்டமாக ஹீரோ-ஹீரோயினுக்குப் பின் கும்பலில் ஆடிக் கொண்டிருந்தார் ரம்பா.

இப்படி எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பை ரம்பா சரியாக உபயோகப்படுத்திக் கொண்டார். கவர்ச்சியாகஉடையணிந்தால் போதும், நடிப்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்பதைப் புரிந்து கொண்டவர் அதைக்கெட்டியாக பிடித்துக் கொண்டு தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் பெரும் ரவுண்டு வந்தார்.

ரஜினி, கமல் என மூத்த நடிகர்களில் தொடங்கி அஜீத்குமார், விஜய் உள்ளிட்ட இளைய தலைமுறை நடிகர்கள் வரைஎல்லோருடனும் இணைந்து நடித்தார். முன்னணி கதாநாயகியாக இருந்த அவருக்கும் முன்னாள் கதாநாயகியாகும்நேரம் வந்தது.

அப்படியே கல்யாணம், காட்சி என்று புத்திசாலித்தனமாக செட்டில் ஆகாமல் சொந்தப்படம் எடுத்துநஷ்டப்பட்டார். அவருக்கு இந்தி நடிகர் கோவிந்தா ஆபத்பாந்தவனாக வந்து உதவி செய்தார். இதையடுத்துதேர்தல் வர, அரசியல் ஆசையில் பா.ஜ.கவில் சேர்ந்தார் ரம்பா. சேர்ந்த வேகத்திலேயே விலகிக் கொண்டார்.

கோவிந்தா செய்த உதவி கடன் அடைக்கத் தான் உதவியதே தவிர, திரும்பவும் காசு பார்க்க உதவவில்லை.இதையடுத்து ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பைத் தேடத் தொடங்கினார்.

குற்றால அருவி போல கவர்ச்சியைக் கொட்ட வேண்டும் என்ற கண்டிஷனுடன், சத்ரபதி படத்தில் ஒரு பாடலுக்குஆட வாய்ப்பு கொடுத்தார் நடிகர் சரத்குமார்.

அந்தப் பாடல் படமாக்கப்பட்டபோது பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காரணம்அந்தளவுக்கு கவர்ச்சியான உடையில் ஆடினாராம் ரம்பா. இந்தச் செய்தி வெளியே பரவி இது போன்றவாய்ப்புகள் நிறைய கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ரம்பா.

ஆனால் எதுவும் வரவில்லை. இனி தமிழ் சரிப்படாது என்று முடிவு செய்து இந்திப் படங்களில் வாய்ப்பு தேடினார்.ஓரிரு வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. இதையடுத்து அவரது நெருங்கியநண்பரான கோவிந்தாவும், ரம்பாவைமும்பைக்கே வந்து விடுமாறு அறிவுரை கூறியதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து தனது சென்னை சாலிகிராமம் வீட்டை விற்று விட்டு மும்பைக்குக் கிளம்ப ரம்பா முடிவுசெய்துள்ளார். தற்போது மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஃபிளாட் ஒன்றை வாங்கியுள்ள ரம்பாஅங்கு குடியேறிவிட்டார்.

சென்னை சாலிகிராமத்தில் ரம்பாவுக்குச் சொந்தமான வீடு விற்பனைக்கு என்று ரம்பாவின் அண்ணன் வாசுஅறிவித்துள்ளார். விலை எவ்வளவு என்று கேட்கிறீர்களா? சும்மா ரூ.2 கோடிதான் !

சமீபத்தில் திடீர் திருமணம் செய்து கொண்ட சிம்ரனும் இப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல்கிளம்பிப் போனார். இப்போது ரம்பா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil