»   »  நக்மா இடத்தில் ரம்பா!

நக்மா இடத்தில் ரம்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

போஜிவுட்டின் (அதாவது போஜ்புரி திரையுலகம்) ராணியாக மாறி வருகிறார் ரம்பா.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்த ரம்பா இப்போது கைவிடப்பட்ேடார் பட்டியலில் முன்னணியில் இருக்கும் முன்னாள் கனவுக் கன்னி.

இடையில் அரசியலில் புகுந்து பார்த்தார். பின்னர் அன்பான பைனான்சியரின் தொல்லையில் சிக்கித் தவித்து மீண்டார். படத் தயாரிப்பிலும் குதித்து படாத பாடு பட்டார்.

எல்லாம் தீர்ந்த பின் பார்த்தால், ஏகப்பட்ட நாயகிகள் தமிழ் சினிமாவையும், தெலுங்கையும் ஆக்கிரமித்து அக்கு வேறு ஆணி வேறாக ஆய்ந்து கொண்டிருந்தனர்.

இதற்கு மேலும் இங்கிருந்தால் கதைக்கு ஆகாது என்று எண்ணி, மும்பைக்கு இடம் பெயர்ந்து மனம் கவர்ந்த கோவிிந்தாவின் பாதுகாப்பில் சில இந்திப் படங்களில் தலை காட்டிக் கொண்டிருந்தார். அப்படியே மிதுன் சக்கரவர்த்தியின் பாசத்தைப் பெற்று வங்க மொழியிலும் தலை காட்டினார்.

இப்போது போஜ்புரிக்கு இடம் பெயர்ந்துள்ளார் ரம்பா. தென்னிந்திய தாரகைகளின் கடைசிப் புகலிடமாக தற்போது போஜ்புரி திரையுலகம் விளங்கி வருகிறது. முன்பு நக்மா இங்கு ேபானார்.

போஜ்புரி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் ரவிகிஷனின் பாச வலையில் சிக்கி அவருடன் தொடர்ச்சியாக ேஜாடி ேபாட்டு நடித்தார்.

இருவரும் காதலிப்பதாகவும், சீக்கிரமே டும் டும் கொட்டப் போகிறார்கள் என்றும் கூட செய்திகள் வந்தன. இருப்பினும் அது கப்சா என்று கூறி விட்டார் நக்மா. இதனால் நக்மாவுக்கு அங்கு வாய்ப்புகள் குறைந்து விட்டன.

இப்போது அந்த இடத்திற்கு ரம்பாவைக் கூட்டி வந்துள்ளார் ரவிகிஷன். ரம்பாவும் இதை கப்பென பிடித்துக் கொண்டு போஜ்புரி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

ரவிகிஷனுடன் சேர்ந்து 3 படங்களில் நடித்து முடித்து விட்டார். தொடர்ந்து சில படங்களில் நடிக்கவும் இருக்கிறாராம். ரம்பாவுக்கு போஜ்புரி சுத்தமாக தெரியாது என்பதால், அவரை தனியாகக் கூப்பிட்டு போஜ்புரி கற்றுக் கொடுத்து ஸ்பாட்டுக்குக் கூட்டி வருகிறாராம் ரவிகிஷன்.

போஜ்புரியும், ரவிகிஷனும் வசதியாக இருப்பதால் தொடர்ந்து கொஞ்ச காலம் அங்கேயே காலத்தைக் கழிக்க முடிவு செய்துள்ளாராம் ரம்பா.

போஜ்புரியிலும் போரடித்து விட்டால் திருமணம் குறித்து யோசிக்கத் திட்டமிட்டுள்ளாராம். ரம்பா யாரை வேண்டுமானாலும் கட்டிக்கலாம் என அவரது அப்பா, அம்மா முழுச் சுதந்திரம் கொடுத்துள்ளனாம். இதனால் ரம்பா படு ஜாலியாக வண்டியை ஓட்டிக் கொண்டுள்ளார்.

காட்டாறு கல கலன்னு ஓடுது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil