»   »  வங்கத்தை கலக்கும் ரம்பா!

வங்கத்தை கலக்கும் ரம்பா!

Subscribe to Oneindia Tamil
ரம்பா இப்போ வங்க மொழி சினிமாவில் ரொம்ப பிஸி.

தமிழில் ஒரு பாட்டுக்கு ஆட வாய்ப்பு பிடிப்பதே குதிரைக் கொம்பாக இருப்பதால் தன் மனதுக்குப் பிடித்த கோவிந்தா மூலமாக மிதுன் சக்கரவர்த்தியைப் பிடித்துவங்காள மொழி சினிமாவுக்குள் புகுந்துவிட்டார்.

கோலிவுட்டை தனது தொடையழகால் சாய்த்த ரம்பா, வங்காள சினிமாவிலும் அதே ஆயுதத்தைப் பயன்படுத்தி களேபரப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த ரம்பா திடீரென ஏற்பட்ட சிம்ரன், மும்தாஜின் விஸ்வரூபத்தால் முடங்கிப் போனார்.

வீட்டில் சும்மா இருந்து, இருந்து டென்சனான ரம்பா, நீங்க சான்ஸ் குடுக்காட்டி என்ன, நானே படம் புடிக்கிறேன் என்று வீடு, சொத்துக்களை அடமானம்வைத்தும், அங்கே இங்கே கை நீட்டியும் ஒரு படத்தை எடுத்தார். அதில் ஏற்பட்ட நஷ்டத்தை எப்படி ஈடு செய்வது என்று தெரியாமல் இன்று வரை திணறிவருகிறார்.

பட வாய்ப்புகள் குறைந்து போய்விட ஒரு சேஞ்சுக்காக பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

ஆனால் வாஜ்பாயாலேயே தேர்தலில் பாஜகவை காப்பற்ற முடியாமல் போய்விட, கட்சியை விட்டு விலகியதைக் கூட வெளியில் சொல்லிக்கொள்ளாமல் மீண்டும் பட வாய்ப்புகளைத் தேடும் வேலையைத் தொடங்கினார் ரம்பா.

அவருக்கு இந்தியில் குத்தாட்டம் போட வாய்ப்புப் பிடித்துத் தந்தார் அவரது மனதுக்குப் பிடித்த கோவிந்தா. 3 சிங்கிள் பாட்டுகளுக்கு ஆட ரம்பாவுக்குவாய்ப்பு கிடைத்தது.

இனி தமிழில் ஹீரோயின் வாய்ப்புக்கு சான்ஸே இல்லை என்ற முடிவுக்கு வந்த ரம்பா, தமிழிலும் ஓடியாடி வாய்ப்பு கேட்டார். சரத்குமார் தயவில் சத்ரபதியிலும்,இப்போது ஐயாவில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் போட்ட ரம்பா இப்போது விஜய்யுடன் சுக்ரனில் ஆடுகிறார்.

இந்தி, தமிழுக்கு இடையே அப்படியே கொல்கத்தாவுக்குப் போய் வந்து இரண்டு வங்க மொழிப் படங்களில் ஹீரோயினாக நடித்து முடித்துவிட்டார். இப்போதுரம்பாவுக்கு அங்கு மேலும் பல வாய்ப்புக்களாம்.

சென்னை, மும்பை, கொல்கத்தா என நாட்டின் எல்லா மூலைகளுக்கும் ஓடி, ஓடி நடித்து, ஆடி பணம் சேர்த்து, கடன் வாங்கிய இடங்களில் எல்லாம் அதைத்திருப்பிக் கட்டிக் கொண்டிருக்கிறார் ரம்பா.

ஆனாலும் இவரிடம் வாங்கிய புரோ நோட்டைத் திருப்பித் தராமல் மேலும் மேலும் வட்டி கேட்டு ஒரு பைனான்சியர் மிரட்டிக் கொண்டிருக்கிறாராம்.

என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது தன்னைச் சந்திக்கும் நிருபர்களிடம் இதைச் சொல்லி புலம்பும் ரம்பா,

திரையுலகில் என்னால் பலனடைந்தவர்கள் நிறையப் பேர். யாரையும் நான் ஏமாற்றியதில்லை. ஆனால் என்னைத்தான் நிறைய பேர் ஏமாற்றியுள்ளனர்.திரையுலகைப் பொருத்தவரை தமிழில் அப்பாஸும், இந்தியில் கோவிந்தாவும்தான் என்னிடம் நன்றாக, உண்மையாக பழகியவர்கள். அவர்கள்தான்எனக்கு நெருக்கமான நண்பர்களும் கூட என்கிறார் ரம்பா.

ஒரு பக்கம் கடன் தொல்லை இருந்தாலும் ரம்பாவுக்கு பெங்களூர், ஹைதராபாத், மும்பையில் பல கோடி மதிப்பில் தலா ஒரு பங்களா உள்ளது உங்களுக்குத்தெரியுமோ.

அதே போல சாலிக்கிராமத்தில் இருந்து ரூ. 2 கோடி மதிப்பிலான தனது பங்களாவை விற்று அந்தக் காசை டிரைவ்-இன் ஹோட்டலாக மாற்றும்முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார் ரம்பா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil