»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கோவை நகைக் கடை விழாவில் ஆட மறுத்தது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் நடிகை ரம்பாவுக்குசென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.

கோவையில் உள்ள பவிழம் நகைக் கடையின் ஆண்டு விழாவில் ஆட மறுத்து விட்டார் என்று கூறி நடிகை ரம்பாமீது நகைக்கடையினர் போலீஸில் புகார் கொடுத்தனர்.

ஆனால் அதன் மீது நடவடிக்கை இல்லாததால் கோவைகுற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கோவை போலீஸார் நடிகை ரம்பா மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் ரம்பா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கோவை போலீஸார்தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறும், தன்னைக் கைது செய்தால் ஜாமீனில் வெளி வருவதற்கு முன்ஜாமீன் வழங்குமாறு கோரியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஏ.கே.ராஜன் 2 வாரங்களுக்கு முன்ஜாமீன் வழங்கினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil