»   »  சிம்ரன் இடத்தில் ரம்பா

சிம்ரன் இடத்தில் ரம்பா

Subscribe to Oneindia Tamil


தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிதமாகன் படம் கன்னடத்தில் 'அனாதரு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதில் சிங்கிள் பாடலுக்கான ஆட்டத்துக்கு சிம்ரனுக்கு வாய்ப்பு கொடுப்பதாக சொல்லி ஏமாற்றி விட்டனராம்.

விக்ரம் நடித்த வேடத்தில் உபேந்திராவும், ரசிகா (சங்கீதா) நடித்த கஞ்சா கன்னி வேடத்தில் நடிகை சங்கவியும் நடித்தனர். இந்த படத்தில் லைலா வேடத்தில் குட்டி ராதிகா நடித்துள்ளார். சூர்யாவின் ரோலில் தர்ஷன் நடித்தார்.

பிதாமகனில் சிம்ரன், சூர்யாவுடன் சேர்ந்து ஒரு கலக்கல் பாட்டுக்கு ஆடியிருந்தார். அதே ஆட்டத்தை கன்னடத்திலும் போட அவரை அழைத்திருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் சிம்ரனுக்கு அல்வா கொடுத்துவிட்டு அந்த பாடலுக்கு ரம்பாவை ஆட வைத்துள்ளனர். வாய்ப்பில்லாமல் எந்த வேடத்திற்கும் நடிக்க தயாராக இருந்த ரம்பா வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஆட்டம் போட்டுள்ளார்.

ரம்பா ஆட்டம் போட்ட 'அனாதரு' தற்போது சூப்பர் ஹிட்டாகியுள்ளதால் கன்னட பட வாய்ப்புகள் ரம்பா வீட்டுக் கதவை தட்ட ஆரம்பித்துள்ளன.

பிதாமகன் படத்தில் நடிகை சிம்ரனாகவே, அந்தப் பாட்டில் சிம்ரன் நடித்திருந்தார். அதுபோலவே நடிகை ரம்பாவாக, ரம்பா கன்னடத்தில் நடித்துள்ளார். நடிகையாகவே ரம்பா நடிப்பது இது புதிதல்ல. ஏற்கனவே உன்னருகே நானிருந்தால் படத்தில் நடிகை ரம்பாவாகவே அவர் தோன்றியிருந்தது நினைவிருக்கலாம்.

அனாதரு ஹிட்டாகியுள்ளதால் ரம்பா மீண்டும் ஒரு ரவுண்ட் அடிப்பாரா அல்லது அவர் தயாரிப்பாளர்களை ரவுண்ட் அடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

Read more about: ramba, simran

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil