»   »  ரம்பாவின் மும்முரம்

ரம்பாவின் மும்முரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் அந்திமக் காலம் நெருங்கிவிட்டதால் சேப்டியான வழிகளில் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார் நடிகைரம்பா.

நடிகர்களுக்கு வயதானால் அரசியல் கட்சி தொடங்குவார்கள் அல்லது வில்லனாக, குணச்சித்திர நடிகராக டீ புரோமோட்ஆவார்கள். ஆனால் நடிகைகளுக்கு அந்த வழியில்லை.

வயது ஆகி, மார்க்கெட் பணால் ஆகிவிட்டால், செகண்ட் ஹீரோயின் லெவலுக்கு இறங்கி வருவார்கள். ஹீரோயினாக உச்சத்தில்இருந்தபோது, ஜோடி சேர மறுத்த நடிகர்களுக்கு எல்லாம் தூது விடுவார்கள்.பின்பு ஒரு பாடலுக்கு ஆடிவிட்டு, கடைசியில்கவர்ச்சியின் இறுதி எல்லை வரைக்கும் சென்று, ஏமாந்த தொழிலதிபரைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.

இதில் ரம்பா இப்போது ஒரு பாடலுக்கு ஆடும் ஸ்டேஜில் இருக்கிறார். அழகிய தீயே, சத்ரபதி ஆகிய படங்களில் ஒரு பாட்டுக்குஆடியவர் இப்போது அதிலேயே தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார்.

சொந்தப் படம் எடுத்து கையைச் சுட்டுக் கொண்டவர், இப்போது அந்த கடனிலிருந்து கோவிந்தா போன்ற இந்தி நடிகர்கள்துணையுடன் மீண்டுவிட்டார். சுக்ரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி வரும் ரம்பா, வங்காளப் படம் ஒன்றில் மிதுன் சக்கரவர்த்திக்குஜோடியாகவும் (நம்ம ரஜினியை விட மூத்த நடிகர் இவர்) நடிக்கிறார்.

சினிமாவில் ஓஹோவென்று இருந்தபோது சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் மும்பையில் வீடு வாங்கிப் போட்டிருந்தார்.சொந்தப் படம எடுத்து நொந்தது போக, கையிலிருக்கும் கொஞ்ச நஞ்ச காசை வைத்து இப்போது சென்னையில் டிரைவ் இன்ஹோட்டல் கட்டவிருக்கிறார்.

இதற்கான வேலைகளில் ரம்பாவின் அண்ணன் மும்முரமாக இருக்க, ரம்பா முழுமூச்சாக வாய்ப்பு தேடும் வேலையில்இறங்கியுள்ளார்.

முதல் கட்டமாக கண்டபடி வெயிட் ஏறிவிட்ட தனது உடம்பை, ஜிம்மிற்குப் போய் போர்க்கால அடிப்படையில் குறைத்தார்.

மெருகு கூட்டிய உடலுடன், புதுகதாநாயகனாகவோ, மார்க்கெட் போன கதாநாயகனாகவோ இருந்தாலும் பரவாயில்லை, நான்ஜோடியாக நடிக்கிறேன் என்று தூது விட்டு வருகிறார்.

ஆனால் அவர் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் சுக்ரன் படம் ரிலீஸானால் தனக்கு ஒரிரண்டுபடங்கள் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார் ரம்பா.

காரணம் படத்தில் ரம்பா செம கவர்ச்சி காட்டியிருக்கிறாராம். அந்தப் பாடல் காட்சி எடுக்கப்பட்டபோது, சூட்டிங் ஸ்பாட்டில்முக்கியமானவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம்.

எப்போதும் அப்பா அல்லது அம்மாவுடன் சூட்டிங்கிற்கு வரும் ரம்பா, இந்த பாடல் எடுக்கப்பட்டபோது, அவர்கள் முன்புநடிக்கக் கூச்சப்பட்டு, அக்காவுடனும், அண்ணியுடனும் படப்பிடிப்பிற்கு வந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil