»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

பெரிய திரையான சினிமா கைவிடும்போதெல்லாம் ஆறுதல் கொடுத்து அரவணைப்பது சின்னத் திரையானதொலைக்காட்சிதான்.

தமிழ் சினிமாவில் சொந்தப் படம் எடுத்து, கடனாளியானவர்கள் லிஸ்டை எடுத்தால் அது பெரிதாக இருக்கும்.தியாகராஜ பாகவதர், கண்ணதாசன், அசோகன், வி.கே.ராமசாமி, வடிவுக்கரசி, மு.மேத்தா, ராமராஜன், நாசர்,ரோஜா, தேவயானி என்று நீளும் அந்த லிஸ்டில் லேட்டஸ்டாக நுழைந்திருப்பவர் ரம்பா.

சோகக் காட்சிகளில் கூட தொடை தெரிய டிரஸ் அணிந்து நடித்தவர் ரம்பா. அவ்வாறு கஷ்டப்பட்டு நடித்தபடத்தை எல்லாம் த்ரி ரோஸஸ் என்ற வேண்டாத படத்தை எடுத்து கையைச் சுட்டுக் கொண்டார். அந்தப் படம்தயாரிக்க ஏகப்பட்ட கடன் வாங்கியதால், இப்போது ரம்பா பெரிய பணக் கஷ்டத்தில் மூழ்கியுள்ளார்.

பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், திறப்பு விழாக்களிலும், கலை இரவுகளிலும் கலந்து கொண்டு கடனைஅடைக்க முடிவு செய்தார். ஆனால் அதிலும் மண் விழுந்தது. கோவையில் நடந்த நகைக் கடை விழாவில் கலந்துகொள்ளப் போனவர் கூடுதலாகப் பணம் கேட்கிறார் என்ற குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்டு, இப்போது நீதிமன்றப்படி ஏறி வருகிறார்.

"கோவிந்தா" "கோவிந்தா" என்று அபயக் குரல் எழுப்பிப் பார்த்தார். அவரும் மும்பையில் இருந்து வந்துஅவ்வப்போது கொடுக்க முடிந்த வரை கொடுத்துப் பார்த்தார். தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தால்கோவிந்தா எஸ்கேப் ஆகி விடுவார் என்பதால் மாற்று வழியை பார்க்க தொடங்கியுள்ளார் ரம்பா.

முக்கிய சானல் ஒன்று ரம்பாவை டிவி தொடரில் நடிக்க கூப்பிட்டு வருகிறது. அதை தனது பரிசீலனையில்வைத்துள்ளார் ரம்பா. விரைவில் தனது முடிவை தெரிவிப்பதாக சேனலிடம் ரம்பா கூறியதையடுத்து தொடருக்கானஇயக்குநர், தயாரிப்பாளரை ரெடி செய்ய ஆரம்பித்துள்ளதாம் அந்த சேனல்.

ரோஜாவில் ஆரம்பித்து சுகன்யா வரை பல பெரிய திரை நடிகைகள் டிவி தொடர்களில் நடித்து வருகிறார்கள்.இவர்களில் தேவயானிக்குத்தான் கொஞ்சம் போல பெயர் கிடைத்துள்ளது. மற்றவர்கள் வந்தார்கள், சென்றார்கள்வரிசையில்தான் உள்ளனர்.

இதற்கிடையே ரம்பாவுக்கு மூன்று முடிச்சு போட்டுவிட அவரது வீட்டார் தயாராகிறார்கள், ஆனால், அவருக்குகோவிந்தா மீதான ஒரு இது காரணமாக திருமணப் பேச்சில் ஆர்வம் காட்ட மறுக்கிறாராம். கோவிந்தா ஏற்கனவேதிருமணமாகி குழந்தை, குட்டிகளுடன் இருப்பவர். இப்போது காங்கிரசில் சேர்ந்துள்ள அவர் மும்பையில்போட்டியிடவும் திட்டமிட்டிருப்பது தனி டிராக்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil