»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை விஜி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வரும் டிவி தொடர் இயக்குநர் ரமேஷ் முன் ஜாமீன் கேட்டு சென்னைஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்த விவரம் வருமாறு:

கடந்த திங்கள்கிழமை நடிகை விஜி தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு தனது காதலர் ரமேஷ்தான்காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.

இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்குப் போலீஸார் ரமேஷ் மேல் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். தலைமறைவாகி விட்ட ரமேஷ்சார்பில் சென்னை ஐகோர்ட்டில் புதன்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

1999 ம் வருடம் எனது சகோதரர் அரவிந்தராஜ் உடல் பொருள் ஆனந்தி என்ற டிவி தொடர் தயாரித்தார். அந்த நாடகத்தில் விஜி நடித்து வந்தார்.அப்போது அவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. இதையடுத்து, விஜி என்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

நான் மறுத்து விட்டேன். ஏனெனில் நான் ஏற்கனவே திருமணம் ஆனவன். எனக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

ஆனால் அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் மிரட்டினார். என் குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தினார். நான் இதுபற்றிஅவரது தந்தையிடம் வற்புறுத்தினேன்.

அவர் விஜியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். ஆனால் தொடர்ந்து அவரைத்திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். அவரது தற்கொலைக்கு நிச்சயமாக நான் காரணமல்ல.

போலீஸ் என்னைக் கைது செய்தால் சென்னை ஐகோர்ட் என்னை ஜாமீனில் விட உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை விஜி உடல் தகனம்

அவசர முடிவெடுத்து விட்டார் விஜி: விஜயகாந்த்

விஜியின் காதலர் தப்பி ஓட்டம்

3 முறை தற்கொலைக்கு முயன்றவர் விஜி

விஜியின் கண்ணீர் கடிதம்

காதல் தோல்வியால் நடிகை விஜி தற்கொலை

Read more about: chennai, lover, ramesh, viji
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil