»   »  குத்து ரம்யா இனி திவ்யா!

குத்து ரம்யா இனி திவ்யா!

Subscribe to Oneindia Tamil

குத்து ரம்யா தனது பெயரை திவ்யா என மாற்றி விட்டார்.

கன்னடத்து பூங்கொடியான (எத்தனை நாட்களுக்குத்தான் பைங்கிளி என்று பழைய பாட்டேயே பாடிக் கொண்டிருப்பது!) ரம்யா, குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களையும் சிலாகிக்க வைத்தார்.

அவரது அதமதப்பான கிளாமரில் கிறங்கிப் போன ரசிகர்கள் குத்து ரம்யா என்று அன்போடு அடை மொழி போட்டு அழைக்க ஆரம்பித்தனர். அதை சந்தேஷாமாக எடுத்துக் கொண்டார் ரம்யா.

ஆனால் யாரோ ஒரு விஷமி அவரிடம் போய், ஆத்தா குத்து ரம்யா என்று கூறுவதால் புளகாங்கிதப்படாதீர்கள். அதுக்கு அர்த்தமே வேறு. டபுள் மீனிங்கில் உங்களைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று போட்டுக் கொடுத்து விட்டார்.

இதனால் அப்செட் ஆகிப் போன ரம்யா, என்னை யாரும் குத்து ரம்யா என்று அழைக்காதீர்கள் என்று கூறினார். ஆனாலும், விடாத தமிழ் திரையுலகினர் தொடர்ந்து குத்து ரம்யா, குத்து ரம்யா என்றே கூறி வந்தனர்.

அட நாறப் பயலுகளா என்று கடுப்பாகிப் போன ரம்யா இப்போது பெயரையே மாற்றி விட்டார். இனிமேல் அவரது பெயர் திவ்யாவாம். (இவரது ஒரிஜினல் பெயர் திவ்யாஸ் பந்தனாஸ்).

அந்தப் பெயரில்தான் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறாராம் குத்து ரம்யா அதாவது திவ்யா.

இதை அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களைக் கூப்பிட்டு அறிவித்த ரம்யா, தயவு செய்து இனிமேல் என்னை யாரும் குத்து ரம்யா என்று கூப்பிடவே கூப்பிடாதீங்க, திவ்யா என்று திவ்யமா கூப்பிடவும், எழுதவும் என்று அன்பொழுக குத்திக் கொண்டார், மன்னிக்கவும் - கேட்டுக் கொண்டார்.

சரி, இனிமே திவ்யாவை யானை திவ்யா என்று கூப்பிடலாம். வாரணம் என்றால் தமிழில் யானை என்றுதானே பொருள்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil