»   »  ரம்யாவின் டபுள் கேம்

ரம்யாவின் டபுள் கேம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

படிப்பது கீதை, இடிப்பது பெருமாள் கோயில் என்ற பழமொழி குத்து ரம்யாவுக்கு கச்சிதமாகப் பொருந்தும்.

தமிழில் அடுத்தடுத்து படங்கள் நடிப்பதிலும் துட்டு சேர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் ரம்யா, அதே நேரத்தில்தமிழ்ப் படங்களுக்குக் குழி பறித்து வரும் கர்நாடக திரையுலகினருக்கும் பக்காவாக ஜால்ரா போடுகிறார்.

அண்மையில் பெங்களூரில் கன்னடமல்லாத படங்களுக்கு எதிராக கன்னடத் திரையுலகினர் நடிகர் ராஜ்குமார்தலைமையில் நடத்திய போராட்டத்தில் மைக் பிடித்தவர்களில் முக்கியமானவர் ரம்யா தான். (மாஜி முதல்வர்எஸ்.எம். கிருஷ்ணாவின் தூரத்து உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது).

தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்கு விதிக்கப்படும் 70 சதவீத வரி தொடர்ந்து நீடிக்க வேண்டும்,தமிழகத்தில் ரிலீஸான 7 வாரங்கள் கழித்தே தமிழ் படங்களை கர்நாடகத்தில் வெளியிட வேண்டும் என்பதுபோன்ற தீர்மானங்கள் அதில் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் உள்ளிட்ட பிற மொழி சினிமாவுக்கு எதிராகக் மூச்சு விடாமல் பேசினார்ரம்யா. ஆனால், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் ரம்யாவை மட்டும் ஒதுக்கிவிடவா போகிறது?. இதைநன்றாகவே உணர்ந்ததாலே என்னவோ ரம்யா மிக அழகாக டபுள் கேம் ஆடிக் கொண்டிருக்கிறார்.

தமிழில் மேலும் வாய்ப்புக்களைத் தேடிக் கொண்டிருக்கும் ரம்யா தமிழ் பத்திரிகைகளுக்குத் தரும்பேட்டியில் எல்லாம் தமிழ்த் திரையுலகை பாராட்டுவதற்கும் தவறுவதில்லை.

இப்படி, கேமராவுக்கு அந்தப் பக்கமும் நன்றாகவே நடிக்கும் ரம்யா குத்து படத்தைத் தொடர்ந்து அவரது ஊரைச்சேர்ந்த அர்ஜூனின் சிபாரிசில் அவருக்கு ஜோடியாக கிரி, கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் யாரடி நீ மோகினிஆகிய படங்களில் பேஷாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கிரி படத்தில் ரீமா சென்னின் பந்தாவினால் நொந்து போன இயக்குனர் சுந்தர்.சி அவரது ஆட்டத்தைக்குறைப்பதற்காகவே ரம்யாவைப் போட்டுள்ளார்.

இதனால் படப்பிடிப்பில் ரீமா சென்னிற்கும், ரம்யாவுக்கும்இடையே ஒரு மெளன யுத்தமே நடந்து கொண்டிருக்கிறதாம்.

இதற்கிடையே சிம்பு நடிக்கும் தொட்டி ஜெயா படத் தொடக்க விழாவில் இருந்து அதிரடியாய் வெளியேறிபரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறா ரம்யா.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. அதில்ரம்யாவும் கலந்து கொண்டார்.

ஆனால், மூன்றாம் வரிசையில் தான் உட்கார வைக்கப்பட்டார். விழாதொடங்கும்போது தன்னை மேடைக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால்அழைக்கவே இல்லை.

டென்ஷனான ரம்யா, மேடையில் உட்கார்ந்திருந்த சிம்புவை செல்போனில் பிடித்து காய்ச்சி எடுத்து விட்டார்.

இதனால் மேடையில் நெளிந்து, வளைந்த சிம்பு அங்கிருந்தபடியே பார்வையால் சமாதானப்படுத்தப் பார்த்தார்.

தாணுவிடம் போய் பேசி ரம்யாவை மேடைக்கு அழைக்கச் சொல்லவும் சிம்புவுக்கு பயம். இதனால் நூடூல்ஸ் மாதிரிரம்யாவை நோக்கி பார்வையாலேயே சிம்பு நெளிய, கோபம் குறையாத ரம்யா விழாவில் இருந்துவெளியேறிவிட்டார்.

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? ரம்யாவை தாணு விழாவுக்கு கூப்பிடவே இல்லையாம், அவரை அழைத்துவந்ததே சிம்பு தானாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil