»   »  ஷங்கரிடம் கெஞ்சிய ரம்யா!

ஷங்கரிடம் கெஞ்சிய ரம்யா!

Subscribe to Oneindia Tamil

ரோபோட் படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன் என்று ஷங்கரைச் சந்தித்து கெஞ்சலாக கோரிக்கை விடுத்துள்ளாராம் குத்து ரம்யா.

ரஜினியை வைத்து சிவாஜி என்ற பிரமாண்டத்தைக் கொடுத்து ஓய்ந்துள்ள ஷங்கர், அடுத்து அதிரடியான பட்ஜெட்டுடன் ( ரூ. 100 கோடியாம்) ஷாருக் கானை வைத்து தனது கனவுப் படமான ரோபோட்டை இயக்கவுள்ளார்.

இப்படத்துக்கான திரைக்கதையை இறுதி செய்வதில் தற்போது படு பிசியாக உள்ளார் ஷங்கர். இதற்காக குளுகுளு நகரான பெங்களூரில் முகாமிட்டு பேப்பர் ஒர்க்கை தீவிரமாக செய்து வருகிறார்.

இதை அறிந்த குத்து ரம்யா, ஷங்கரை சந்தித்தார். வழக்கமான குசல விசாரிப்புகளை முடித்து விட்டு, எனக்கு உங்களது ரோபோட் படத்தில் கண்டிப்பாக ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கெஞ்சலான கோரிக்கையை வைத்தாராம்.

இதைக் கேட்ட ஷங்கர், உங்களுக்குப் பொருத்தமான கேரக்டர் இருந்தால் கண்டிப்பாக கூப்பிடுகிறேன் என்று சொல்லி வைத்து அனுப்பினாராம்.

ஷாருக்கானை மட்டும் முடிவு செய்துள்ள ஷங்கர் படத்தின் பிற கேரக்டர்களுக்கு யாரைப் போடுவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம் (ரோபோட் கேரக்டரில் அனிமேட்ட் ரோபோட் நடிக்கிறதா அல்லது யாராவது நடிகர் நடிப்பாரா என்பது தெரியவில்லை!!).

ஷங்கரின் பதிலால் பாதி திருப்தி அடைந்த நிலையில் சென்ற குத்து ரம்யா இப்போது தமிழில் தூண்டில், வாரணம் ஆயிரம், பொல்லாதவன் என மூன்று படங்களில் திறமை காட்டி வருகிறார். இதுதவிர தாய்மொழியான கன்னடத்தில் வகை தொகையில்லாமல் நிறையப் படங்களில் நடித்து வருகிறார்.

பரம சந்தோஷமாக கை நிறையப் படங்களை வைத்துள்ள ரம்யாவுக்கு ஒரே ஒரு வருத்தம்தானாம். அதாவது திவ்யா என்று பெயரை மாற்றியும் கூட யாருமே அப்படிக் கூப்பிட மாட்டேன் என்கிறார்களாம். குத்து ரம்யா, குத்து ரம்யா என்றுதான் கூப்பிடுகிறார்களாம்.

அடடா, பெரிய தப்பாச்சே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil