»   »  கனவில் கூட நினைக்கவில்லையே, ஆனால் நடந்துவிட்டது: ரம்யா கிருஷ்ணன்

கனவில் கூட நினைக்கவில்லையே, ஆனால் நடந்துவிட்டது: ரம்யா கிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி போன்ற படத்தில் நடிப்பேன் என நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. பாகுபலி 2 படம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டமாக உள்ளது.

படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடித்தது குறித்து ரம்யா கிருஷ்ணன் கூறும்போது,

படையப்பா

படையப்பா

படையப்பா படத்திற்கு முன்பு வரை என் சொந்த குரலில் பேச யாரும் அனுமதிக்கவில்லை. நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு நீங்கள் சொந்தக் குரலில் தான் பேச வேண்டும் என்று சொல்லிய ரஜினி சார், கே.எஸ். ரவிக்குமார் சாருக்கு நன்றி.

குரல்

குரல்

என் குரலை கேட்டவர்கள் என்னை டப் செய்ய வேண்டாம் என்றார்கள் என்று நான் கூறியும் நீங்கள் தான் பேச வேண்டும் என்று ரஜினி சார் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் சார் ஆகியோர் கூறினார்கள்.

பாகுபலி

பாகுபலி

பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்திற்கு உங்கள் சொந்தக் குரல் தான் பொருத்தமானது. நீங்களே டப்பிங் பேசுங்கள் என்று இயக்குனர் ராஜமவுலி சாரின் தந்தை விஜயேந்திர பிரசாத்காரு கூறினார்.

சிவகாமி

சிவகாமி

சிவகாமி கதாபாத்திரத்திற்கு நீங்கள் பேசினால் தான் அது சிறப்பாக இருக்கும். இல்லை என்றால் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவமே போய்விடும் என்று விஜயேந்திர பிரசாத் தெரிவித்தார். பாகுபலி போன்ற பிரமாண்ட படத்தில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்றார் ரம்யா.

English summary
Ramya Krishnan said that she never ever dreamt that she would act in a mega movie like Baahubali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil