»   »  ரஜினியுடன் மீண்டும் இணையும் நீலாம்பரி?

ரஜினியுடன் மீண்டும் இணையும் நீலாம்பரி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாக வந்து ரஜினிக்கு 'டஃப் ஃபைட்' தந்த படையப்பாவை மறக்க முடியுமா? தனக்கு நிகரான முக்கியத்துவத்தை ரஜினி அதில் ரம்யா கிருஷ்ணனுக்கு கொடுத்திருப்பார்.

இன்றுவரை தமிழ் சினிமாவின் முக்கிய வில்லி பாத்திரமாக அந்த கேரக்டர் நிலைத்து நிற்கிறது.

Ramya Krishnan to join with Rajini again?

அதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் கலக்கு கலக்கோ என்று கலக்கி வரும் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி வரை பட்டையை கிளப்பி வருகிறார்.

இப்போது பாகுபலி 2 ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் அடுத்து நடிக்கவிருப்பது ரஜினியின் மெகா படமான 2.ஓ வில். படத்தின் முக்கிய கேரக்டரில் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம் ரம்யா.

English summary
Sources says that actress Ramya Krishnan will join with Rajini in his magnum opus 2.O.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil