ஆபாச பட நடிகையாக நடிக்க சம்மதித்தது ஏன்?: ரம்யா கிருஷ்ணன் விளக்கம்
Recommended Video

சென்னை: ஆபாச பட நடிகையாக நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என்று தெரிவித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.
வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு பெயர் போனவர் ரம்யா கிருஷ்ணன். விலை மாதுவாக கூட நடித்த ரம்யா தற்போது விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச பட நடிகையாக நடித்துள்ளார்.
இந்நிலையில் அந்த படத்தில் நடித்தது குறித்து ரம்யா கூறியதாவது,

லீலா
நான் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச பட நடிகையாக நடித்துள்ளேன். என் கதாபாத்திரத்தின் பெயர் லீலா. அந்த படத்தில் ஒரு காட்சிக்காக 37 டேக் வாங்கிகேன். என் முதல் படத்திற்கு கூட நான் அத்தனை டேக் வாங்கியது இல்லை. இது போன்று இனி நடக்காமல் இருக்கும் என்று நம்புகிறேன்.

நடிப்பு
தியாகராஜன் குமாரராஜா தனக்கு என்ன தேவை என்று தெரிந்து அதை கலைஞர்களிடம் இருந்து வெளிக்கொண்டு வருவார். அன்றைய நாளின் கடைசி காட்சியை இயக்குநர் ஓகே செய்யாதபோது எனக்கு இரவு தூக்கமே வரவில்லை. ஒரு கலைஞருக்குள் இருக்கும் முழுத் திறமையை வெளிக்கொண்டு வரும் இயக்குநர்களை எனக்கு பிடிக்கும்.

வாய்ப்பு
நான் ஏற்கனவே நடித்த கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க வேண்டாம். ஏதாவது புதிதாக கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்பார்த்த நேரத்தில் சூப்பர் டீலக்ஸ் பட வாய்ப்பு வந்தது.

குமாரராஜா
லீலா போன்ற கதாபாத்திரம் அடிக்கடி கிடைக்காது. அதனால் தான் தியாகராஜன் குமாரராஜா கேட்டதும் நடிக்க ஒப்புக் கொண்டேன். ட்ரெய்லரை வைத்து கதையை கண்டுபிடிக்க முடியாது என்கிறார் ரம்யா கிருஷ்ணன். ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்த அதே ரம்யா கிருஷ்ணன் ஆபாச பட நடிகையாக நடிக்க எப்படி ஒப்புக் கொண்டார் என்று பலரும் வியந்த நிலையில் அவர் இந்த விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











