Just In
- 1 hr ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 2 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 3 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 3 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
தற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Automobiles
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- Finance
'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா?
சென்னை : விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாசப் பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பது தெரிய வந்துள்ளது.
ஆரண்யகாண்டம் படத்திற்கு பிறகு குமாரராஜா தியாகராஜன் இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் இந்த படத்தில், சமந்தா, பிகத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
எனவே இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக குமாரராஜா தியாகராஜவின் திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என கோலிவுட்டில் பேசப்படுகிறுது.

ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரம்:
இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் என்ன என்பதை இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஆபாசப்பட நடிகையாக நடித்திருக்கிறாராம்.

பாதியில் விலகிய நதியா:
முன்னதாக இந்தக் கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக இருந்தது. ஆனால் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் சிலப்பல காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து ரம்யாகிருஷ்ணன் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமாதா:
தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்யக்கூடியவர் ரம்யாகிருஷ்ணன். பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் அவரது ராஜமாதா கதாபாத்திரம் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. இந்த சூழ்நிலையில் மற்ற முன்னணி நாயகிகள் நடிக்கத் தயங்கும் ஆபாசப்பட நாயகி கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் துணிச்சலாக நடித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்ப்பு:
இயக்குநர் குமாரராஜா தியாகராஜனின் இந்த தகவலால் சூப்பர் டீலக்ஸ் படம் பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.