»   »  ரம்யா நம்பீசன்!

ரம்யா நம்பீசன்!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்குப் புதிதாக ஒரு இளமை நாயகி வந்து இறங்கியுள்ளார். ரம்யா நம்பீசன் என்ற நாமகரணம் கொண்ட அவர் சேரனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் இன்றைக்கு அதிக அளவில் பிரகாசித்துக் கொண்டிருப்பது மலையாள நடிகைககள்தான். குத்து மதிப்பாக கணக்கிட்டு இங்கு வரும் மலையாள நடிகைகள், ஒரு படம் அல்லது இரண்டு படங்களில் பெரும் சொத்தைக் குவித்து விடும் அளவுக்கு திறமை படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

கோபிகா, மீரா ஜாஸ்மின், ஆசின், நயனதாரா, பாவனா, கார்த்திகா, காவ்யா, சந்தியா என பல மலையாள நடிகைகள் தமிழ் மூலம்தான் கேரளாவிலேயே நன்கு அறியப்பட்டவர்கள்.

இவர்களுக்கெல்லாம் மலையாளத்தில் சில ஆயிரங்களில்தான் ஒரு காலத்தில் சம்பளம் தரப்பட்டது. தமிழில் லட்சக்கணக்கில் வாங்கிக் குவிக்கும் இவர்களால் மறுபடியும் மலையாளப் படங்களில் நடிக்க முடியவில்லை. காரணம், லட்சத்தைப் பார்த்து விட்டு மீண்டும் ஆயிரத்திற்குத் திரும்ப யாருக்குத்தான் மனசு வரும்.

தற்போதைய நிலையில் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் மலையாள நடிகையாக ஆசின் இருக்கிறார். இவரது சம்பளம் ரூ. 45 லட்சம் என்கிறார்கள். ஆனால் இதை விட கூடுதலாகத்தான் வாங்குவார் என்று
ஒரு தரப்பு கூறுகிறது.

தமிழைக் கலக்கி வரும் மலையாள நடிகைகளின் வரிசையில் லேட்டஸ்டாக ரம்யா நம்பீசன் சேர்ந்துள்ளார். மலையாளத்து இளம் நடிகையான ரம்யா, ஆனச்சந்தம் என்ற படத்தில் ஜெயராமுடன் இணைந்து நடித்து நடிகையானவர்.

ரம்ஜானுக்கு ரிலீஸான சாக்லேட் என்ற மலையாளப் படத்தில் அவரது நடிப்பு பெருவாரியாக பாராட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழுக்கு வந்துள்ளார் ரம்யா.

'ராமன் தேடிய சீதை' என்ற படத்தில் சேரனுக்கு ஜோடியாக ரம்யா நடிக்கிறார். கோடம்பாக்கம் என்ற படத்தை எடுத்த ஜெகன்ஜிதான் இப்படத்தையும் இயக்கப் போகிறார்.

இந்தப் படம் தவிர வேறு ஒரு படமும் ரம்யாவைத் தேடி வந்துள்ளதாம். இந்த இரு படங்களும் வெளியான பின்னர் இன்னொரு நயனதாராவாக, ஆசினாக, கோபிகாவாக ரம்யாவும் மாறக் கூடும், யார் கண்டது!

Read more about: ramya nambeesan
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil