Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 24 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகம்...
- News
"பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா? ஆதாரம் காட்டுங்க".. பாஜகவை வம்புக்கிழுத்த திக்விஜய் சிங்
- Automobiles
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
ரம்யா பாண்டியன் ராக்கிங்.. ரெட்ரோ லுக்கில் என்னம்மா அழகா இருக்காரு.. வெளியானது தோட்டா பாடல்!
சென்னை: பிக் பாஸ் பிரபலங்களான ரியோ மற்றும் ரம்யா பாண்டியன் நடனமாடி உள்ள ஆல்பம் பாடலான தோட்டா தற்போது வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டவர்களின் ரெட்ரோ பாடல் போல இந்த தோட்டா பாடல் உருவாகி உள்ளது.
ரியோவின் 'விக்'கள் சிரிப்பை வரவழைக்கின்றன. அதே சமயம் ரம்யா பாண்டியனின் ஹாட் காஸ்ட்யூம் மற்றும் அசத்தலான நடனம் ரசிகர்களை அட போட வைக்கிறது.
பிக் பாஸ் பிரபலத்துடன் ஜோடி சேர்ந்த ரம்யா பாண்டியன்.. இந்த தோட்டா சும்மா தெறிக்குதே!

தோட்டா பாடல் ரிலீஸ்
Noise and Grains யூடியூப் சேனல் தயாரித்து வெளியிட்டுள்ள தோட்டா பாடல் தற்போது வெளியாகி உள்ளது. சென்னையில் சிறப்பாக நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி அந்த பாடலை வெளியிட்டுள்ளனர். இதில், பிக் பாஸ் பிரபலங்களான ரியோ மற்றும் ரம்யா பாண்டியன் இணைந்து நடனமாடி உள்ளனர். சமீபத்தில், இதுதொடர்பான அறிவிப்புகளும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகின.

ரம்யா பாண்டியன் ராக்கிங்
பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்ய பாண்டியன் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய உடனே சூர்யா தயாரிப்பில் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்தார். பின்னர் உடனடியாக மம்மூட்டி படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். திடீரென பிக் பாஸ் அல்டிமேட்டில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ரெட்ரோ ரம்யா
ரியோ மற்றும் ரம்யா பாண்டியன் ரெட் லுக்கில் செம கூலாக தோட்டா ஆல்பம் பாடலுக்கு நடனமாடி அசத்தி உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே நட்பாக பழகிய இருவரும் இப்படி ஜோடி போட்டு டான்ஸ் ஆடுவார்கள் என ரசிகர்கள் கொஞ்சம் கூட நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அட்டகாசமாக ஆடி உள்ளனர்.

ராஜு பாய்
சென்னையில் இன்று நடைபெற்ற தோட்டா ஆல்பம் பாடல் வெளியீட்டு விழாவில் ராஜு ஜெயமோகன் கலந்து கொண்டார். ரம்யா பாண்டியன் அருகே அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது. சீக்கிரமே ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகணும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். விஜய் டிவி விருது விழாவில் அவர் நடனமாடிய அந்த கலாய் பாடல் செம ஹிட்டாகி வருகிறது.