For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரம்யா பாண்டியன் ஆர்மியில் சேர்ந்த நடிகர் விவேக் - வாய்ப்பு கேட்கிறார்

  |
  Ramya Pandian Hot Photos: ஜோக்கர் பட நாயகி புகைப்படம்

  சென்னை: நடிகை ரம்யா பாண்டியனுக்கு முன்னணி இயக்குநர்கள் வாய்ப்பு தரவேண்டும் என்று நடிகர் விவேக் சிபாரிசு செய்து ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  வாய்ப்பு வர வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் வரும். எப்போ கதவை தட்டும் எப்படி தட்டும் யார் தட்டுவார்கள் ஏன்றெல்லாம் தெரியாது. ஆனால் வர வேண்டும் என்றால் வந்தே தீரும்.

  ஜோக்கர், ஆண் தேவதை படங்களின் நாயகி ரம்யா பாண்டியன், அடுத்தடுத்த படங்கள் இல்லாமல் தவித்து வருவது குறித்து தமிழ் சமூகம் அதிகம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் மொட்டை மாடி ஒன்றில் எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்களை வலைதளங்களில் போட்டு வலை வீசினார்.

  அந்த வலையில் அடுத்த படம் மாட்டியதோ இல்லையோ தமிழ் ஜனங்களில் சுமார் 63 சதவிகிதம் பேர் சிக்கினர். அதிலும் குறிப்பாக இடுப்பு மடிப்பு தெரிய அவர் ஒய்யாரமாக அமர்ந்திருந்த ஒரு படம் பலரையும் தூக்கமில்லாமல் செய்து விட்டது.

  விஜய் சேதுபதி நீங்க இவ்வளவுதானா?.. மீண்டும் கிளம்பிய விஜய் சேதுபதி நீங்க இவ்வளவுதானா?.. மீண்டும் கிளம்பிய "அந்த" சர்ச்சை!

  ரம்யா பாண்டியன் ஆர்மி

  ரம்யா பாண்டியன் ஆர்மி

  அந்தப் புகைப்படத்துக்குக் கீழே வெளியான கமெண்ட்களில் பலரும் இப்படிப்பட்ட பேரழகி வாய்ப்பில்லாமல் மொட்டை மாடியில் காத்திருக்கிறாரா, ஐயகோ என்னடா இது தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை, என்று பதிவிட்டனர். இன்னும் சிலர் ரம்யா பாண்டியனுக்கு ஆர்மி துவங்கி தங்கள் விசுவாஸத்தை வெளிப்படுத்தினர்.

  ரம்யா பாண்டியன்

  ரம்யா பாண்டியன்

  இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒருவர் ஆன்லைன் மார்க்கெட்டிங் எப்படி செய்கிறார், யாரை சென்றடைகிறது என்பது தான் முக்கியம். அப்படி ஒரு ஸ்கூப் நிகழ்வு தான் ரம்யா பாண்டியன் கிளிக்குகள். அந்த ஃபோட்டோஸ் பார்த்து நடிகர் விவேக் ரம்யாவுக்கு சிபாரிசு செய்து வருகிறார்.

  வாய்ப்பு கொடுங்க

  வாய்ப்பு கொடுங்க

  நடிகை ரம்யா பாண்டியனுக்கு ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ போன்ற இயக்குநர்கள் வாய்ப்பு தரவேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் வைத்திருப்பதுடன் அவர்கள் மூவருக்கும் டேக் செய்வதன் மூலம் அச்செய்தியை கொண்டு சேர்த்துள்ளார். நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான விவேக்.

  ரம்யா பாண்டியன் ஆர்மி

  ரம்யா பாண்டியன் ஆர்மி

  ரம்யா ஆர்மியில் தன்னையும் இணைத்துக்கொண்ட காமெடி நடிகர் விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில் பண்பும், அழகும், பதில்களில் பணிவும் கொண்ட ரம்யா பாண்டியன் தன் நடிப்பால் ஜோக்கர், ஆண்தேவதை படங்களில் மிளிர்ந்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அதை சரியாக உச்சரிக்கவும் செய்யும் இவரை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள் @ARMurugadoss @Atlee_dir @shankarshanmugh...என்று பதிவிட்டுள்ளார்.

  நடிகைக்கு சிபாரிசு

  நடிகைக்கு சிபாரிசு

  அவரது இந்த அதிர்ச்சி நடவடிக்கையால் சினிமா பிஆர்ஓ க்களும், நடிகைகளின் மேனேஜர்களும் தங்கள் பொழப்பில் மண் விழுந்துவிடுமோ என அதிர்ந்துபோயுள்ளனர். ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும் ஒரு பெரிய நடிகர் ஒரு நடிகைக்கு சிபாரிசு செய்வது நல்ல விசயம் தான், அதுவும் நல்ல தமிழ் பேசும் நடிகை. விவேக் செய்த புரட்சிக்கு பெரிய இயக்குனர்கள் செவி சாய்பார்களா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

  English summary
  Actor Vivek's nomination on Twitter has prompted actor Ramya Pandian to give the leading directors a chance.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X