»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil
குத்து படத்தின் நாயகி திவ்யாஸ் பந்தனாஸ் என்ற ரம்யா அடுத்ததாக கஸ்தூரிராஜாவின் படத்தில் நடிக்கவுள்ளார்

"கன்னடத்து கதகளி"யான திவ்யாஸ் பந்தனாசின் பெயர் தமிழ் மக்களின் வாயில் நுழைய மறுப்பதால் அதை ரம்யா என்றுமாற்றிவிட்டார் குத்து படத்தின் இயக்குனர். படம் வெளியாகி ஓரளவுக்கு ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ரம்யாவுக்கு தமிழ்ரசிகர்களின் மத்தியில் கிளம்பியுள்ள கிரேஸை பார்த்துவிட்டு பெட்டிகளுடன் அவர் வீட்டுக்குக் கிளம்பி வர ஆரம்பித்துவிட்டனர்தயாரிப்பாளர்கள்.

குத்து படக்கதையில் விஷேசமாக எதுவும் இல்லை. ஒரு தாதாவின் மகளை ஒரு கல்லூரி மாணவர் காதலித்தால் என்ன நேரும்என்பதை எந்த ஒரு தமிழ் சினிமா ரசிகரை நள்ளிரவில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லிவிடுவார்கள்.

ஆனாலும், அரதப்பழசான கதையை தைரியமாக எடுத்திருக்கிறார்கள். திரைக்கதையிலாவாது கொஞ்சம் வித்தியாசம்காட்டியிருக்கலாம். பல இடங்களில் ரன், தம் பட வாசனை அடிக்கிறது. கோவில் படத்தில் மறந்திருந்த விரல் வித்தையை சிம்புஇந்தப் படத்தில் தொடர்ந்திருக்கிறார். விஷ்க், விஷ்க் என்று விரலைச் சுழற்றும்போது, எங்கே கண்களில் குத்திக் கொள்வாரோஎன்ற பயம் ஏற்படுகிறது.

பாடல் காட்சிகளில் ரம்யா வெகு தாராளமாய் நடந்து கொண்டுள்ளார். கொஞ்சமாய் நடிக்கவும் செய்கிறார். அவரது தாராளக்கவர்ச்சியில் ரசிகர்களோடு சேர்ந்து மயங்கிவிட்ட தயாரிப்பாளர்கள் வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அதில் முதலில்ரம்யாவைப் பார்த்து கையில் அட்வான்ஸை திணித்தவர் நடிகர் தனுசின் அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா தான்.

தானே தயாரிக்கப் போகும் தனது அடுத்த படத்தில் நடிக்க ரம்யாவின் கால்ஷீட்டை வாங்கிவிட்டார். ரம்யாவும் சந்தோஷமாகிகாசை வாங்கிப் போட்டுக் கொண்டு தேதிகளை ஒதுக்கிவிட்டார். படத்தில் தனுஷ் இருக்கிறாரா, இல்லையா என்பதுதெரியவில்லை.

ஆனால் கஸ்தூரியைப் பிடித்தால் தனுஷைப் பிடிக்க எத்தனை நேரமாகும் என்ற தொலைநோக்கில் கஸ்தூரிக்கு ஓ.கே. சொல்லிவிட்டாராம் ரம்யா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil