»   »  பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராணா… சைக்கோ என்ற த்ரிஷா

பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராணா… சைக்கோ என்ற த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை திரிஷாவிற்கு அவரது முன்னாள் நண்பர் ராணா ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதற்கு திரிஷாவோ நன்றி சைக்கோ என்று பதிவிட்டுள்ளார். இதுதான் தற்போதைய பரபரப்பு பேச்சாக உள்ளது.

வருண்மணியன் உடன் திருமணம் நின்று போனதாக ஊடகங்கள் கலந்து கட்டி செய்தி வெளியிட்டாலும் அதற்கெல்லாம் கலங்காத திரிஷா தனது பிறந்தநாளை வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடினார்.

திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தமிழ் சினிமாவின் பல்வேறு நட்சத்திரங்களும் ட்விட்டர் பக்கத்தில் கூறி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் திரிஷா தனது நன்றியையும் தெரிவித்து வருகிறார்.

சிம்புவின் வாழ்த்து

நடிகர் சிம்பு தனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் ஹேப்பி பெர்த் டே ஜெஸ்ஸி என்று பதிவிட்டுள்ளார். அதற்கு நன்றி கார்த்தி அலைஸ் சிலம்ப்ஸ் என்று கூறியுள்ளார்.

சார்மி என்ன இது?

இதேபோல நடிகை சார்மி கூறியுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்திக்கும் நன்றி கூறியுள்ளார். அதேபோல, நடிகர்கள் விஷால், ஜெயம் ரவி, மாதவன், வைபவ் ஆகியோரும் நடிகைகளில் ஹன்சிகா, சமந்தா, குஷ்பு, ராதிகா சரத்குமார், தன்ஷிகா, ஸ்ரேயா ரெட்டி, பிரியா மணி, நிகிஷா பட்டேல் ஆகியோருக்கும் நன்றி கூறியுள்ளார் திரிஷா

தயாநிதி அழகிரி வாழ்த்து

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள திரிஷா, கார்த்திகா நாயர், இயக்குனர்கள் செல்வராகவன், கீதா செல்வராகவன், திரு, ஐஸ்வர்யா தனுஷ் பாடகி சின்மயி உள்ளிட்ட அனைவரின் வாழ்த்துக்களுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

ராணா வாழ்த்து

இந்நிலையில், இவரது முன்னாள் காதலரான ராணா டகுபதியும் திரிஷாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவருக்கு திரிஷா நன்றி சைக்கோ என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்லப்பெயரா அது?

செல்லப்பெயரா அது?

சைக்கோ என்பது ராணாவுக்கு திரிஷா வைத்த செல்லப் பெயரா? அல்லது சமீபத்தில் வருண்மணியன்-திரிஷா பிரிவுக்கு ராணாதான் காரணம் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. அதை மனதில் வைத்து திரிஷா அப்படி கூறினாரா? என்று தெரியவில்லை.

வருண் மணியன் வாழ்த்தலையே

வருண் மணியன் வாழ்த்தலையே

அதேநேரத்தில் திரிஷாவின் வருங்கால கணவர் என்று கூறப்பட்ட வருண்மணியன் திரிஷாவுக்கு இதுவரை பிறந்தநாள் வாழ்த்து எதுவும் கூறவில்லை

English summary
Rana Daggubati surprised everyone when he took to twitter and wished his supposed ex-girlfriend, Trisha Krishnan, on her birthday. The Chennai beauty is on a holiday with her girl gang to celebrate the special day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil