உங்க வீட்டு ஜன்னல் வழியா அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்க்கலாமா?.. வைரலான வீடியோ.. ஆலியா பட் ஆவேசம்!

மும்பை: ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் மும்பை வீட்டில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர ஜோடியான ரன்பீர் மற்றும் ஆலியாவுக்குச் சொந்தமான பங்களாவின் முன்பக்கக் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களுக்கு அவர்களின் ஆடம்பர வாழ்க்கையைப் பற்றிய ஒரு அரிய பார்வையை வழங்கியுள்ளது.

மும்பையின் பாலி ஹில் பகுதியில் அமைந்துள்ள ₹250 கோடி மதிப்பிலான இந்தப் property, ரன்பீர் கபூரின் தந்தையான மறைந்த ரிஷி கபூருக்கும், நீது கபூருக்கும் சொந்தமானது. தற்போது அது முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய அழகும் நவீன ஆடம்பரமும் கலந்த ஒரு அற்புதமான வடிவமைப்புடன் இந்த புதிய கட்டமைப்பு உள்ளது.

சமீபத்தில் வெளியான இந்த வீடியோ, உயரமான நுழைவு வாயில்கள், நேர்த்தியான கட்டிடக்கலை மற்றும் பசுமையான landscaping கொண்ட ஒரு பிரமாண்டமான முகப்பைக் காட்டுகிறது. இது ஒரு உண்மையான பாலிவுட் பாணி மாளிகை என்றும், எதிர்காலத்தில் ஒரு அடையாளச் சின்னமாக மாறும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரன்பீர் கபூர் - ஆலியா பட்டின் வீட்டின் வீடியோ வைரலான நிலையில், 'ஆல்பா' திரைப்பட நடிகை ஆலியா பட், அங்கீகரிக்கப்படாத படப்பிடிப்பு மற்றும் வீடியோ பரவியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை "தனியுரிமை மீறல்" என்று கண்டித்த ஆலியா, தங்கள் "தனிப்பட்ட இடம்" என்பது "உள்ளடக்கம்" அல்ல என்று கூறினார்.

ஆகஸ்ட் 26 அன்று, ஆலியா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு கடுமையான பதிவைப் வெளியிட்டார். அதில் "மும்பை போன்ற நகரத்தில் இடவசதி குறைவாக உள்ளது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். சில சமயங்களில் உங்கள் ஜன்னலில் இருந்து பார்ப்பது மற்றொருவரின் வீடாக இருக்கலாம். ஆனால், தனியார் குடியிருப்புகளைப் படமாக்கி, அந்த வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட யாருக்கும் உரிமை இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் கூறுகையில், "எங்கள் வீடு இன்னும் கட்டுமானத்தில் உள்ளது – எங்கள் அனுமதி இல்லாமல் பல மீடியாக்களில் பதிவு செய்யப்பட்டு பரப்பப்பட்டுள்ளது. இது ஒரு தெளிவான தனியுரிமை மீறல் மற்றும் ஒரு தீவிரமான பாதுகாப்புப் பிரச்சினை. ஒருவரின் தனிப்பட்ட இடத்தைப் படம்பிடிப்பதோ அல்லது புகைப்படம் எடுப்பதோ 'சரியான அணுகுமுறை' அல்ல – அது ஒரு மீறல். இது ஒருபோதும் சாதாரணமாக்கப்படக் கூடாது" என்று தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். "யோசித்துப் பாருங்கள்: உங்கள் வீட்டின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோக்கள் உங்கள் அனுமதி இல்லாமல் பகிரப்பட்டால் நீங்கள் பொறுத்துக்கொள்வீர்களா? நம்மில் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எனவே, இதுபோன்ற உள்ளடக்கத்தை ஆன்லைனில் பார்த்தால், அதை அனுப்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று ஒரு பணிவான ஆனால் உறுதியான வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோக்களை வெளியிட்ட ஊடக நண்பர்களுக்கும்: இவற்றை உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, நடிகையின் வீட்டை ஜூம் செய்து படமெடுத்து ஆன்லைனில் வெளியிட்ட ஒரு ஊடக போர்ட்டலை தனியுரிமை மீறலுக்காக ஆலியா கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலியா பட், அடுத்ததாக YRF-ன் முதல் பெண் கதாநாயகி பிரதான 'ஆல்பா' உளவுப் படத்தில் நடிக்கிறார். ரன்பீர் கபூர், நிதேஷ் திவாரியின் 'ராமாயணம்' படத்தில் நடிக்கிறார். தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் & வார்' படத்திற்காக விக்கி கௌஷல் மற்றும் ஆலியாவுடன் படப்பிடிப்பில் இருக்கிறார். 'தூம் 4' படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X