»   »  ரன்பீர் - தீபிகா கெமிஸ்ட்ரி பற்றி எனக்குக் கவலையில்லை- கத்ரீனா கைப்

ரன்பீர் - தீபிகா கெமிஸ்ட்ரி பற்றி எனக்குக் கவலையில்லை- கத்ரீனா கைப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபிகா படுகோனே - ரன்பீர் கபூர் கெமிஸ்ட்ரி குறித்து தான் கவலை கொள்ளவில்லை என்று ரன்பீரின் காதலி கத்ரீனா கைப் கூறியிருக்கிறார்.

பாலிவுட்டின் இளம்நடிகர் ரன்பீர் கபூர் தனது முன்னாள் காதலி தீபிகா படுகோனேவுடன் இணைந்து, தற்போது தமாஷா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தீபிகா - ரன்பீர் இடையேயான கெமிஸ்ட்ரி பலராலும் பாராட்டப் பட்டது.

Ranbir Kapoor-Deepika Padukone's chemistry

இந்த கெமிஸ்ட்ரி குறித்து ரன்பீரின் காதலி கத்ரீனா கைப் கவலை கொண்டார் என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி குறித்து தான் கவலை கொள்ளவில்லை என்று கத்ரீனா தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறும்போது "இந்த வதந்திகளை யாரோ வேண்டுமென்று திட்டம் தீட்டி பரப்பி வருகிறார்கள். இந்த வதந்திகள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றன, மேலும் இது ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்புவதாக இருக்கிறது.

திரையில் தீபிகா - ரன்பீர் கெமிஸ்ட்ரி குறித்து நான் கவலை கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார்". தற்போது ரசிகர்கள் தீபிகா, கத்ரீனா இருவரில் யாரின் கெமிஸ்ட்ரி ரன்பீருடன் பொருந்திப் போகிறது என்று பட்டிமன்றம் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இம்தியாஸ் அலி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வரும் தமாஷா திரைப்படம் வருகின்ற நவம்பர் 27 ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

English summary
Katrina Kaif is not worried about Ranbir Kapoor-Deepika Padukone's chemistry in Tamasha. Katrina Said "Such idle gossip is really avoidable and childish".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil