»   »  இயக்க வரும் ரஞ்சிதா!

இயக்க வரும் ரஞ்சிதா!

Subscribe to Oneindia Tamil

முன்னாள் நாயகி ரஞ்சிதா, ஸ்டார்ட், கட், ஆக்ஷன் சொல்ல வருகிறார். அதாவது இயக்குநராகிறார்.

பாரதிராஜாவின் சோடை போகாத கண்டுபிடிப்புகளில் ஒருவர்தான் ரஞ்சிதா. முதல் படத்தில் கார்த்திக்குடன் இணைந்த ரஞ்சிதா, அடுத்தடுத்து முன்னணி நாயகர்களுடன் இணைந்து ஒரு ரவுண்டு வந்தார்.

புத்திசாலியான நடிகைகளில் ஒருவராக கோலிவுட்டில் அறியப்பட்டவரான ரஞ்சிதாவுக்கு நாளடைவில் வாய்ப்புகள் மங்கிப் போய் கடைசியில் ஓரம் கட்டப்பட்டார்.

இதையடுத்து ராணுவ மேஜரைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலான ரஞ்சிதா பின்னர் சின்னத் திரைக்கு மாறினார். டிவி தொடரில் நடித்த ரஞ்சிதா, அதையும் முடித்து விட்டு சின்னதாக ஓய்வுக்குப் போனார்.அதன் பின்னர் அம்மா, அக்கா கேரக்டருக்கு தாவி நடித்து வந்தார். இப்போது நடிப்பை விட்டு விட்டு இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியில் எனது முதல் படத்தை நினைத்தேன். இப்படத்தில் நடிக்க ப்ரீத்தி ஜிந்தாவை முயற்சித்தேன். ஆனால் அவர் எனது கதைக்குப் பொருத்தமானவராகத் தெரியவில்லை.

இதையடுத்து அதே கதையை தமிழில் உருவாக்க தீர்மானித்துள்ளேன். இதில் முன்னணி நடிகர், நடிகையர் நடிக்கவுள்ளனர். அவர்களில் சிலர் இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கு முன்பாக இயக்கத்தில் நல்ல பயிற்சி எடுத்துக் கொள்ள விரும்பினேன்.

என்னை அங்கீகரிக்க முன்வரும் இயக்குநரிடம் சில காலம் பயிற்சி பெற காத்திருந்தேன். என்னைப் புரிந்து கொண்டு இயக்குநர் பூரி ஜெகநாத் முன்வந்தார். அவரது குழுவிலும் என்னை சேர்த்துக் கொண்டார் என்றார் ரஞ்சிதா.

தற்போது பூரி ஜெகநாத்திடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார் ரஞ்சிதா. இந்த நிலையில் தற்போதைய டிரெண்டுக்கேற்ப சில கதைகளை ரெடி செய்து வைத்துள்ளாராம் ரஞ்சிதா. விரைவில் தனது முதல் படத்தை அவர் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil