»   »  தீபிகாவுக்கும், ரன்வீர் சிங்கிற்கும் அடுத்த ஆண்டு நிச்சயதார்த்தமாம்!

தீபிகாவுக்கும், ரன்வீர் சிங்கிற்கும் அடுத்த ஆண்டு நிச்சயதார்த்தமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கும், அவரது காதலியும், நடிகையுமான தீபிகா படுகோனேவுக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க வந்த புதிதில் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்தார். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து வருகிறார். தீபிகா ஒரு சில காதல் தோல்விகளுக்கு பிறகு ரன்வீருடன் உள்ளார்.

இந்நிலையில் அவர்கள் தங்கள் காதலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

ரன்வீர் சிங், தீபிகா படுகோனேவின் காதலை அவர்கள் குடும்பத்தார் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மோதிரம் போட்டு திருமணத்தை நிச்சயம் செய்ய உள்ளனர். நிச்சயம் முடிந்த கையோடு திருமணமாம்.

உண்மையா?

உண்மையா?

தீபிகாவுக்கும், ரன்வீருக்கும் திருமணம் என்றும், திருமண நிச்சயதார்த்தம் என்றும் செய்தி வெளியாவது இது முதல் முறை அல்ல. அதனால் நிச்சயம் நடந்தால் தான் அது உண்மையா என்பது தெரிய வரும்.

திருமணம்

திருமணம்

பாலிவுட்டில் வெற்றி மேல் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் தீபிகா தற்போதே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக தயாராக இல்லை. திருமணத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று அவர் நினைக்கிறாராம்.

பாஜிராவ் மஸ்தானி

பாஜிராவ் மஸ்தானி

சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவான ராம் லீலா படத்தில் நடிக்கையில் காதலில் விழுந்த ரன்வீரும், தீபிகாவும் தற்போது அவரது இயக்கத்தில் பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்வீர்

ரன்வீர்

தீபிகா தனது காதல் பற்றி பேசாமல் உள்ளார். இந்நிலையில் ரன்வீரோ தீபிகா தான் தனது காதலி என்பதை பல முறை சொல்லாமல் சொல்லிவிட்டார். இதனால் கடுப்பான தீபிகா இனிமேல் காதல், காதலி என்று பேட்டி கொடுத்த அவ்வளவு தான் என்று ரன்வீரை திட்டியுள்ளாராம். திட்டு வாங்கியதை அடுத்து அடக்கி வாசிக்கிறார் ரன்வீர்.

English summary
Bollywood actor Ranveer Singh and actress Deepika Padukone are reportedly going to get engaged in february 2016.
Please Wait while comments are loading...