»   »  நடிகர் ரன்வீர் சிங் ஒரு வெட்கம் கெட்டவர்: வித்யா பாலன்

நடிகர் ரன்வீர் சிங் ஒரு வெட்கம் கெட்டவர்: வித்யா பாலன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் ரன்வீர் சிங் வெட்கம் கெட்டவர் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் கான்களுக்கு மத்தியில் ஹீரோ ரேஞ்சுக்கு நடிப்பில் அசத்தி வலம் வருபவர் வித்யா பாலன். வித்யா கஹானி 2 மற்றும் பேகம் ஜான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் ரன்பிர் கபூர் பற்றி பேசியுள்ளார்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்கிற்கு எந்த படத் தலைப்பு மிகவும் பொருந்தும் என்று வித்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பேஷரம். ஆமாம் ரன்வீர் சிங் வெட்கம் கெட்டவர். நான் நல்ல வழியில் கூறுகிறேன் தவறான வழியில் அல்ல என்றார். ரன்வீர் சிங் பேஷரம்(வெட்கம் கெட்டவர்) என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர்

ரன்வீர் சிங், ரன்பிர் கபூர் அல்லது சித்தார்த் மல்ஹோத்ரா இதில் யாருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு வித்யா கூறுகையில், ரன்பிர் கபூருடன் நடிக்க விரும்புகிறேன். ஒரு நடிகராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

பர்ஃபி

பர்ஃபி

ரன்பிர் கபூர் நடித்த படங்களில் பர்ஃபி எனக்கு பிடிக்கும். அவரின் ஏ தில் ஹை முஷ்கில் அல்லது சமீபத்திய படங்களை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் அருமையான நடிகர் என்றார் வித்யா.

வித்யா

வித்யா

ரன்பிர் ஏற்கனவே தன்னை விட வயதில் மூத்தவரான ஐஸ்வர்யா ராயுடன் ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்தார். இந்நிலையில் சீனியர் வித்யாவுக்கும் ரன்பிருடன் நடிக்கும் ஆசை வந்துள்ளது.

English summary
What an irony! A few years ago, Ranbir Kapoor did a film named 'Besharam' but for the powerhouse actress Vidya Balan, it's Ranveer Singh, who is actually Besharam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil