»   »  இந்த நடிகை நிச்சயமா கோலிவுட்டில் பொழைச்சுக்குவாங்க!

இந்த நடிகை நிச்சயமா கோலிவுட்டில் பொழைச்சுக்குவாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இருப்பதிலேயே தமிழ் திரையுலகம் தான் பெஸ்ட் என்று நினைக்கிறார் வாகா பட நாயகி ரன்யா ராவ்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ரன்யா ராவ். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் செய்து வந்த அவருக்கு கிச்சா சுதீப்பின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவர் விக்ரம் பிரபுவின் வாகா படத்தில் நாயகியாக ஒப்பந்தம் ஆகி நடித்தார்.

இந்நிலையில் அவர் தமிழ் திரையுலகம் குறித்து கூறுகையில்,

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

வாகா படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக பாராட்டுகள் வந்து குவிகின்றது. நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. கோலிவுட்டில் எனது பயணம் சிறப்பாக துவங்கியுள்ளது.

கோலிவுட்

கோலிவுட்

தமிழ் திரையுலகில் தான் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள் உள்ளனர். கோலிவுட்டில் சிறந்த படங்கள் தயாரிக்கப்படுகின்றன. நான் மும்பையில் வசித்து வருகிறேன்.

தமிழ் படம்

தமிழ் படம்

எனக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியதும் என் தோழிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். காரணம் இங்கு தான் சிறந்த படங்கள் எடுக்கப்படுகின்றது.

மணிரத்னம்

மணிரத்னம்

எனக்கு பிடித்த இயக்குனர் என்றால் அது மணிரத்னம் தான். நான் இரண்டு தமிழ் படங்களை பார்த்துள்ளேன். மணிரத்னம் திரையில் காதலை வெளிப்படுத்தும் விதம் எனக்கு பிடிக்கும். எனக்கு காதல் படங்கள் என்றால் பிடிக்கும்.

English summary
Actress Ranya Rao, who made her Tamil debut with the recently released Vikram Prabhu-starrer Wagah, is happy about making an entry into Tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil