மாநாட்டில் சிம்புவுக்கு ஜோடியாகும் வெற்றி நாயகி?

By Siva

சென்னை: சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி. இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்த படம் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அடுத்த மாதம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கிறார்.

மாநாடு

மாநாடு

மாநாடு படத்திற்காக சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொள்ள உள்ளார். இதற்காக அவர் பாங்காக்கிற்கு செல்கிறார். இந்நிலையில் மாநாடு படத்தில் சிம்புவுடன் ஜோடி சேரப் போவது யார் என்பது தெரிய வந்துள்ளது.

ராஷி கன்னா

ராஷி கன்னா

இமைக்கா நொடிகள் படம் மூலம் கோலிவுட் வந்த ராஷி கன்னா தான் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது விஷால் ஜோடியாக அயோக்யா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடங்க மறு

அடங்க மறு

அண்மையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ஹிட்டான அடங்க மறு படத்தின் ஹீரோயின் ராஷி கன்னா தான். முதல் படமும், இரண்டாவது படமும் ஹிட்டான மகிழ்ச்சியில் உள்ளார் அவர். இந்நிலையில் அவருக்கு மாநாடு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பொங்கலுக்கு பிறகு மாநாடு படத்தில் நடிப்பவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். மாநாடு படத்தின் திரைக்கதை எழுதும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாம். படத்தில் சிம்பு அரசியல் பேசப் போவதால் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X