நாய்க்கு விமான டிக்கெட்? ராஷ்மிகா இது ரொம்ப ஓவர்..தயாரிப்பாளர் புகார்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : நடிகை ராஷ்மிகா மந்தனா தனது நாய்க்கும் சேர்த்து விமான டிக்கெட் கேட்டு தயாரிப்பாளர்களை கட்டாயப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்து இளசுகளின் கனவுகன்னியாக மாறிவிட்டார். அந்த படத்தில் இடம் பெற்ற 'இன்கேம் இன்கேம் காவாலா' என்ற ஒரே பாடல் ராஷ்மிகாக புகழின் உச்சிக்கே கொன்று சென்றது.

இதையடுத்து,கன்னடம்,தெலுங்கு என கொடிகட்டிப்பறந்த நேஷனஸ் கிரஷ் நாயகி தற்போது பாலிவுட்டில் தடம் பாதித்து பிஸியாக நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

ஓ சாமி.. வாயா சாமி..என புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனை பார்த்து ஏங்க பெருமூச்சுடன் ராஷ்மிகா மந்தனா போட்ட ஆட்டம் அவரை, இந்திய அளவில் கொண்டு சேர்த்துள்ளது. தற்போது அவர் மிஷன் மஞ்சு, குட்பை என்கிற இந்தி திரைப்படத்தில் அமிதாப்பச்சனுடன் நடிக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தளபதியின் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

நாய் விமானத்தில் டிக்கெட்

நாய் விமானத்தில் டிக்கெட்

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக இருக்கும் ராஷ்மிகா, படப்பிடிப்புக்காக அடிக்கடி விமானத்தில் பயணிக்க வேண்டிய சூழலும் உள்ளதாம். அந்த சமயத்தில் தனது செல்ல நாய்க்குட்டியையும் அவர் கூடே அழைத்து செல்வதாகவும், தன்னோடு சேர்த்து தனது நாய்க்கும் விமானத்தில் டிக்கெட் போட்டால் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று தயாரிப்பாளர்களிடம் அவர் கன்டிஷனாக கூறிவிட்டாராம்.

தயாரிப்பாளர்கள் புலம்பல்

தயாரிப்பாளர்கள் புலம்பல்

இதனால், தயாரிப்பாளர் நாய்க்கு சேர்த்து டிக்கெட் போடுவதாக புகார் எழுந்துள்ளது. நாய்க்கு தடுப்பூசி மற்றும் விமானப்பயணச் சான்றிதழுக்கு ஏற்றவாறு நாய்யை லக்கேஜில் எடுத்துச் செல்ல வேண்டி இருப்பதாகவும், மேலும், நாயின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ஏறக்குறைய மற்றுமொரு பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டிற்கு சமம் என்று தயாரிப்பாளர்கள் புலம்புவதாக இணையத்தில் செய்தி வெளியானது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி இணையவாசிகள் பலர் நாய்க்கு விமான டிக்கெட்? ராஷ்மிகா இது ரொம்ப ஓவரா தெரியவில்லை என கருத்துகளை பதிவிடத் தொடங்கிவிட்டனர்.

மோசமான செய்தி

மோசமான செய்தி

இந்நிலையில், இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராஷ்மிகா, ஸ்மைலி எமோஜிகளை பதிவிட்டு, ஹே கமான்.. இவ்வளவு மோசமாகவா நடந்த கொள்வீர்கள்.. என் செல்லபிராணி ஆரா என்னுடன் பயணிக்க வேண்டும் என்று விரும்பினால் கூட, அவள் அனைத்து இடங்களுக்கும் என்னுடன் வர விரும்புவதில்லை. அவள் ஹைதராபாத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.உங்கள் அக்கறைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

தயவு செய்து அனுப்பாதீங்க

தயவு செய்து அனுப்பாதீங்க

இது போன்ற மேலும் பல செய்திகள் இருப்பதாக அவரது ரசிகர் ஒருவர் ட்விட்டரில் நடிகையிடம் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த நடிகை, "அப்படியா? தயவு செய்து அவற்றை எனக்கு அனுப்பாமல் இருங்கள். என் கடவுளே.. நான் இந்த செய்தியை கேட்டு ஆச்சரியப்படுகிறேன். இருப்பினும் நான் வருந்துகிறேன்.என பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X