திருமணம் எப்போது நடக்கும் என்பதை சொன்ன ராஷ்மிகா மந்தனா.. ஆஹா ரெடி ஆகிட்டாங்க.. அடுத்து டும் டும்தான்

சென்னை: ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் சில வாரங்களுக்கு முன்பு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்தன. ஆனால் அதனை சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் அது உண்மைதான் என்று அடித்து சொல்ல தொடங்கினார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கன்னட திரையுலகத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ராஷ்மிகா மந்தனா நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்தார். இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் க்ரீன் சிக்னல் கிடைத்ததை தொடர்ந்து அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் பிரமாண்டமாக நடைபெற்றது. திரைத்துறைக்கு வந்தவுடனேயே நிச்சயதார்த்தம்வரை ராஷ்மிகா சென்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அப்படிப்பட்ட நிலைமையில்தான் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க ஆரம்பித்தன.

செம பிஸியான ராஷ்மிகா: அதாவது தெலுங்கு திரையுலகம் அவரை சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்று தலை மேல் தூக்கி வைக்க ஆரம்பித்தது. வரிசையாக அங்கு ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். இதன் காரணமாக கரியரில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்த ராஷ்மிகா திருமணத்தை நிறுத்திவிட்டார்.மேலும் ரக்‌ஷித் ஷெட்டி மீது இருந்த அவருக்கு இருந்த காதலும் காணாமல் போனது.

Rashmika Mandanna Breaks Silence on Engagement Rumors with Vijay Deverakonda Reveals Her Marriage
Photo Credit:

பான் இந்தியா ஹீரோயின்: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப தனக்கு மவுசு இருக்கும்போதே புகழையும், பணத்தையும் சம்பாதிக்க முடிவு செய்துவிட்டார். அந்தவகையில் வரிசையாக நடித்துவரும் அவர் இப்போது பான் இந்தியா ஹீரோயினாக மாறியிருக்கிறார். மேலும அவரை நேஷனல் க்ரஷ் என்றும் கொண்டாடிவருகிறார்கள் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவரகொண்டாவுடன் காதல்: இதற்கிடையே கீதா கோவிந்தம் படத்தில் நடித்தபோது விஜய் தேவரகொண்டாவுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக தெரிகிறது. இரண்டு பேரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் பரவின. இது ஒருபக்கம் இருக்க சில வாரங்களுக்கு முன்பு அவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தமே முடிந்துவிட்டது என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் அவர்கள் இரண்டு பேரும் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை.

ராஷ்மிகா பேட்டி: இந்நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "எனக்கு 30 வயது ஆன பிறகு திருமணம் செய்துகொள்வேன். இருபதிலிருந்து 30 வயது என்பது தலை குனிந்து வேலை செய்ய வேண்டிய வயது. இந்த நேரத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும். வாழ்க்கை பயணத்தை கண்டறிய வேண்டும். 30 முதல் 40 வயது என்பது வேலையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் சமநிலைப்படுத்தும். அதற்கேற்ப திட்டமிட வேண்டும். நான் அதை செயல்படுத்துவது பற்றி யோசித்திருக்கிறேன்.

குழந்தைகள் பற்றி: நான் இன்னும் அம்மாவாகவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அம்மாவாகும்போது குழந்தைகள் மீது அன்பு காட்டுவேன். அவர்களுக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். போருக்கு செல்ல வேண்டுமென்றாலும் செல்வேன். அவர்களை பாதுகாப்பாக வைக்க விரும்புகிறேன். அதற்கான தேவையான உடற்தகுதியை பராமரிக்க வேண்டும். அதையும் இப்போதிருந்தே தொடங்கிவிட்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X