சிரித்து சிக்கிக் கொண்ட ராஷ்மிகா மந்தனா.. எல்லாம் டும் டும் டும் விஷயம் தான்.. கடைசியில் தான் ஹைலைட்!
மும்பை: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் பல ஆண்டுகளாக காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்த மாதம் அவர்களின் ரகசிய நிச்சயதார்த்தத்தை விஜய் தேவரகொண்டாவின் குழு உறுதிப்படுத்தியதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பொது நிகழ்ச்சிகளில் ராஷ்மிகா அணிந்திருக்கும் பெரிய வைர மோதிரத்தையும், விஜய் அணிந்திருக்கும் ஸ்டைலான மோதிரத்தையும் ரசிகர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.
ராஷ்மிகாவின் புதிய படமான "தம்மா" படத்தின் புரோமோசனின் போது, அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டபோது, அவரது பதில் அனைவரையும் கவர்ந்தது. கலாட்டா பிளஸ் பேட்டியில், ராஷ்மிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தபோது, அவர் ஒரு கணம் குழப்பமடைந்தார். ஆனால், பேட்டி எடுத்த பரத்வாஜ் ரங்கநாதனோ, உங்களது வாசனை திரவிய வணிகம் குறித்து வாழ்த்தியதாகக் கூறி, மேலும் பல விஷயங்கள் இருப்பதாக மறைமுகமாகத் தெரிவித்தார்.

அதற்கு ராஷ்மிகா புன்னகையுடன், "இல்லை, இல்லை. உண்மையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன, ஏனெனில் பல நிகழ்வுகள் நடந்துள்ளது. ஆனால் நீங்கள் தெரிவித்த வாழ்த்துகளை நான் அனைத்திற்காகவும் ஏற்றுக்கொள்கிறேன்," என்றார். ராஷ்மிகாவின் இந்த வசீகரமான பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு இணையவாசி, "அவரது எதிர்வினையைப் பாருங்கள், எவ்வளவு அருமையாக இருக்கிறது!" என்று கருத்துத் தெரிவிக்க, மற்றொருவர், "கியூட்டி!" என்று பாராட்டினார். ஒரு ஆர்வமுள்ள ரசிகர், "எல்லோருக்கும் தெரிந்திருக்கும்போது ஏன் மறைக்கிறீர்கள்?" என்று இணையத்தில் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
காதல்: விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் "கீதா கோவிந்தம்" (2018) மற்றும் "டியர் காம்ரேட்" (2019) ஆகிய இரண்டு படங்களில் இணைந்து நடித்தனர். அவர்களின் திரை கெமிஸ்ட்ரி எப்போதும் வெளிப்படையாக இருந்ததால், அவர்களின் தனிப்பட்ட உறவு குறித்து பல யூகங்கள் எழுந்தன. அவர்களின் உறவு வெளிப்படையாகத் தெரிந்தபோதிலும், ரசிகர்கள் அவர்களின் காதல் கதை எப்படித் தொடங்கியது என்பதை அறிய இப்போதும் ஆர்வத்துடனே உள்ளனர்.

எப்போது திருமணம்: இவர்களின் திருமணம் குறித்து பரவி வரும் வதந்திகளின்படி, ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திருமணத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் மற்றும் இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள். ராஷ்மிகா தற்போது ஆயுஷ்மான் குரானா மற்றும் நவாசுதீன் சித்திக் நடித்துள்ள "தம்மா" என்ற திகில் காதல் நகைச்சுவைப் படத்தின் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி: இந்த படம் அவரது பலதரப்பட்ட திரைப்பட வரிசையில் ஒரு புதிய வகைப் படமாக இருக்கும் என்று அவரே பல மேடைகளில் கூறியுள்ளார். மேலும் அவர் தனது நடிப்பால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். கன்னட சினிமாவில் இருந்து தனது திரைப்பயணத்தைத் தொடங்கி, இன்றைக்கு இந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக உயர்ந்து நிற்கிறார். ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் காதல் மற்றும் திருமணம் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களின் ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரின் திரையுல வளர்ச்சி மற்றும் இவர்களின் காதல் குறித்தும் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வது குறித்தும் மகிழ்ச்சியில் உள்ளனர். இணையத்தில் இருவரும் ஏதாவது பகிர்ந்தால் வேகமாக ரியாக்ட் செய்யும் அளவுக்கு இவர்கள் இருவரும் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











