விஜய் தேவரகொண்டாவுடன் நிச்சயதார்த்தம்?.. உறுதி செய்த ராஷ்மிகா மந்தனா?.. மோதிரத்தை பாருங்க

பெங்களூரு: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் கடந்த வாரத்தில் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் ஒன்று வெளியானது. அதுகுறித்து இரண்டு பேருமே வாய் திறக்கவில்லை. தங்களது பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்கள். இந்நிலையில் ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவை வைத்து பலரும் பலவிதமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

நேஷனல் க்ரஷ் என்று இந்திய ரசிகர்களால் புகழப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. முதலில் அவர் கன்னட திரையுலகத்தில் அறிமுகமானாலும் அவருக்கு பெரிய ரெஸ்பான்ஸை கொடுத்தது என்னவோ தெலுங்கு திரையுலகம்தான். விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் அவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதனையடுத்து வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க; அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

பான் இந்தியா ஹீரோயின்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தார். இரண்டு பாகங்களுமே இந்திய அளவில் ஹிட். எனவே இவரும் பான் இந்தியா ஹீரோயின் என்ற நிலைக்கு நகர்ந்தார். பாலிவுட்டிலும் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்ததை அடுத்து; அவரை இந்திய திரைத்துறையில் நேஷனல் க்ரஷ் என்று புகழ்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஹிந்தியில் நடித்தாலும் பெரிய வெற்றி எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Rashmika Mandanna confirms secret engagement with Vijay Deverakonda
Photo Credit:

விஜய் தேவரகொண்டாவுடன் காதல்?: இதற்கிடையே அவரும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்துவருவதாக கடந்த சில வருடங்களாகவே தகவல்கள் பரவிவருகின்றன. அவர்களும் ஜோடியாக ரெஸ்டாரண்ட் செல்வது, வெளிநாடுகளுக்கு செல்வது என இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் பேசப்பட்டது. ஒரு விழா மேடையிலும் தான் காதலிப்பவர் சினிமாவில் இருப்பவர்தான் என்று பொடி வைத்து பேசினார்.

ரகசிய நிச்சயதார்த்தம்?: நிலைமை இப்படி இருக்க இருவருக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக கடந்த வாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே மௌனம்தான் காத்துவருகிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்க்ளிடையே பயங்கரமாக கவனத்தை ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது.

என்ன வீடியோ?: அதாவது தனது செல்ல நாய்க்குட்டியை கொஞ்சும்படி வீடியோவை போட்டிருக்கிறார் அவர். அதில் அவர் ஒரு மோதிரம் அணிந்திருக்கிறார். அதனைப் பார்த்த பலரும், அவர் கையில் அணிந்திருப்பது நிச்சயதார்த்த மோதிரம்தான்; இதேபோன்ற ஒரு மோதிரத்தை விஜய் தேவரகொண்டாவும் அணிந்திருக்கிறார். எனவே அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதி செய்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். இது உண்மையா இல்லையா என்பது ராஷ்மிகாவுக்கும் விஜய்க்குமே தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X