ராஷ்மிகா மந்தனா கையில் அதை பார்த்தீங்களா? அடடே நிச்சயம் ஆகிடுச்சா?.. துபாயில் பரபரப்பு!
துபாய்: நடிகை ராஷ்மிகா மந்தனா தனது மோதிர விரலில் அணிந்திருந்த மோதிரம் பார்வையாளர்களையும் அவரது ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்யப் போகிறாரா? இருவருக்கும் ரகசியமாக நிச்சயம் ஆகிவிட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
துபாயில் நடைபெற்ற SIIMA விருதுகள் 2025 நிகழ்வில் பங்கேற்க ராஷ்மிகா மும்பையிலிருந்து சென்றிருந்தார். ராஷ்மிகா மந்தனா துபாய் வந்தடைந்தபோது, அவரது மோதிர விரலில் இருந்த ஒரு தங்க மோதிரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இது அவர் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதற்கான அறிகுறியா என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் சூடுபிடித்தது. குறிப்பாக, ரெடிட் தளத்தில், ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களா என்று பயனர்கள் ஆர்வத்துடன் விவாதித்தது தான் சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
சைமா விருது விழாவில் ராஷ்மிகா: துபாய் விமான நிலையத்தில் ராஷ்மிகா வந்திறங்கியபோது, புகைப்படக்கலைஞர்கள் சூழ்ந்துக் கொண்டு அவரைப் படமெடுத்தனர். அவர் கருப்பு நிற ஆடை அணிந்திருந்த நிலையில், புகைப்படக் கலைஞர்களை பார்த்து கை அசைக்கையில், அவரது மோதிர விரலில் இருந்த தங்க வளையம் தெளிவாகத் தெரிந்தது. இதனைப் பார்த்த ஒரு ரெடிட் பயனர், "இப்போது அவர் ராஷ்மிகா தேவரகொண்டாவாக இருப்பார்" என்று கருத்து தெரிவித்தார்.
ராஷ்மிகாவுக்கு நிச்சயம் ஆகிடுச்சா: மற்றொரு நபர் "ராஷ்மிகா தேவரகொண்டாவா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார். சில ரசிகர்கள் விஜய்யை "விஜய் மந்தனா" என்றும், ரஷ்மிகாவை எதிர்கால "திருமதி லைகர்" என்றும் அழைத்தனர். எனினும், ஒரு சிலர் அது நிச்சய மோதிரம் போல் இல்லை என்றும், "அந்த மோதிரம் நிச்சயதார்த்த மோதிரம் போல் இல்லை" என்றும் குறிப்பிட்டனர்.
எல்லாமே உருட்டு: SIIMA விருதுகள் விழாவின் ரெட் கார்ப்பெட்டில் ரஷ்மிகா மீண்டும் தோன்றியபோது, அவர் புடவையில் இருந்தார். அப்போது மோதிரம் அவரது சுண்டு விரலுக்கு மாறியிருந்தது. ரசிகர்களுடன் செல்பி எடுத்தபோது இது தெளிவாகத் தெரிந்தது. அவரது எளிமையையும், அன்பான இயல்பையும் பலரும் பாராட்டினர்.
விஜய் தேவரகொண்டாவுடன் காதல் கிசுகிசு: விஜய் மற்றும் ராஷ்மிகா முதன்முதலில் 2018ல் வெளியான 'கீதா கோவிந்தம்' படத்தில் இணைந்து நடித்தனர். அவர்களின் திரைப்பயண கெமிஸ்ட்ரி காரணமாக அவர்கள் காதலிப்பதாக வதந்திகள் பரவின. மீண்டும் 2019ல் வெளியான 'டியர் காம்ரேட்' படத்திலும் நடித்தனர். அப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி குறைவு என்றாலும், இவர்களின் கெமிஸ்ட்ரி பாராட்டப்பட்டது.
ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் சில புகைப்படங்கள் விஜய்யின் வீட்டில் இருந்தோ அல்லது அவர் விடுமுறைக்குச் சென்ற அதே இடத்தில் இருந்தோ எடுக்கப்பட்டவை என்று ரசிகர்கள் அடிக்கடி கண்டுபிடித்துள்ளனர். விஜய் கடைசியாக கௌதம் தின்னானுரி இயக்கிய 'கிங்டம்' படத்தில் நடித்தார், அதுவும் வெற்றி பெறவில்லை. அடுத்து ராகுல் சங்க்ரித்தியன் இயக்கத்தில் ஒரு வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.
பான் இந்தியா நடிகை: ராஷ்மிகா கடைசியாக நடித்த 'குபேரா' திரைப்படம் உலகளவில் ₹135 கோடி வசூலித்தது. அடுத்ததாக 'தி கேர்ள்பிரண்ட்' மற்றும் 'தாமா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு ராஷ்மிகா மந்தனாவின் பாலிவுட் ஹாரர் படமான தாமா வெளியாகிறது. சமீபத்தில், படு கவர்ச்சியாக அந்த படத்தில் ராஷ்மிகா நடித்த காட்சிகள் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டது. பான் இந்தியா நடிகையாக அசத்தி வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்த ஆண்டு சிக்கந்தர், சாவா, குபேரா, தாமா என பல படங்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











