முதல் திருமண நிச்சயதார்த்தம் நின்னு போச்சு.. 7 வருட ரகசிய காதல்.. ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா காதல் கதை!

ஹைதராபாத்: கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியின் கிரிக் பார்ட்டி படத்தில் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா அறிமுகமானார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ராஷ்மிகா கஷ்டப்பட்டு சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த நிலையில், முதல் படத்தில் நடித்த நடிகருடனே காதல் வயப்பட்டார். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது.

ஆனால், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த நிச்சயதார்த்தம் திருமணத்தில் முடியாமல் அப்படியே பிரேக்கப் ஆனது. அதன் பின்னர், கன்னட திரையுலகில் ராஷ்மிகாவுக்கு அழுத்தம் வர அவர் அங்கிருந்து அப்படியே தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி என மற்ற மொழிகளில் நடிக்க ஆரம்பித்து நேஷ்னல் கிரஷ்ஷாகவும் மாறினார்.

Rashmika Mandanna first engagement failed and her 7 years secret love story with Vijay Deverakonda
Photo Credit:

2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து தெலுங்கில் ராஷ்மிகா மந்தனா நடித்த கீத கோவிந்தம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது மட்டுமின்றி நல்ல வாழ்க்கை துணையையும் கொடுத்துள்ளது.

நின்று போன திருமணம்: சைக்காலஜி படித்துவிட்டு மாடலிங் துறையில் இருந்த ஆர்வத்தால் அழகிப் போட்டிகளில் பங்கேற்ற ராஷ்மிகா மந்தனா சினிமாவில் நடிக்க சான்ஸ் தேடி அலைந்த நிலையில், கிரிக் பார்ட்டி படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. காந்தாரா படத்தை இயக்கி நடித்து உலகளவில் பாராட்டுக்களை அள்ளிய ரிஷப் ஷெட்டி இயக்கிய படம் தான் அது. அந்த படத்தில் ரக்‌ஷித் ஷெட்டி ஹீரோவாக நடித்திருந்தார். அவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்ட ராஷ்மிகா கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்தை நிறுத்திவிட்டார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பது தான் தனது கனவு என்றும் அதற்கு தடையாக இருக்கும் திருமணத்தை இப்போது செய்ய வேண்டாம் என ராஷ்மிகா முடிவெடுத்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

7 வருட ரகசிய காதல்: கீத கோவிந்தம் படத்தில் நடிக்கும் போதே விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலிக்கத் தொடங்கி விட்டனர். தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கும் போது அவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் தீயாய் பரவின. ஆனால், இருவரும் வெளிப்படையாக அதை அறிவிக்காமல் ரகசியம் காத்து வந்தனர்.

ரசிகர்களுக்கு காதல் சிக்னல்: ஆனால், அதே சமயம் தாங்கள் இருவரும் காதலிப்பதை மறைமுகமாக ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் அறியும் வண்ணம் அடிக்கடி ஒரே இடங்களில் இருவரும் இருக்கும் தனித்தனி புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிடுவது, விஜய் தேவரகொண்டாவின் கூலர்ஸ், உடை அணிந்து ராஷ்மிகா வருவது என ஏகப்பட்ட சிக்னல்களையும் இந்த ஜோடி கொடுத்துக் கொண்டே வந்தது.மேலும், விஜய் தேவரகொண்டா குடும்பத்துடன் ராஷ்மிகா ரொம்பவே நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியாகி இவர்களது காதலை உறுதி செய்தது. சில சினிமா நிகழ்ச்சிகளிலும் மறைமுகமாக இருவரும் காதலிப்பதை தெரிவித்த வண்ணமே இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இருவரும் நிச்சயம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

Rashmika Mandanna first engagement failed and her 7 years secret love story with Vijay Deverakonda
Photo Credit:

தை மாசம் திருமணம்: ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள தாமா இந்த தீபாவளிக்கு வெளியாகிறது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அவருக்கும் ஒரு சின்ன பிரேக் தேவைப்படுவதால், நிச்சயம் செய்துக் கொண்டனர் என்று கூறுகின்றனர். ஆனால், இதையும் இருவரும் ரகசியமாகவே வைத்திருக்கின்றனர். வரும் பிப்ரவரி மாதம் அதாவது அடுத்த 2026ம் ஆண்டு தை மாதம் ராஷ்மிகா கழுத்தில் விஜய் தேவரகொண்டா தாலி கட்டப்போவது உறுதி என தெலுங்கு மீடியாக்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. அதிகாரப்பூர்வமாக இருவரும் அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X