தென்னிந்திய நடிகைகளில் ராஷ்மிகா தான் டாப்...எதுல தெரியுமா ?
சென்னை : கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக இருக்கும் ராஷ்மிகா, தமிழில் ஒரே படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்டார்.
முதல் படத்திலேயே கிராமத்து கெட்அப்பில் நடித்து பக்கத்து வீட்டு பெண் போன்ற உணர்வை தமிழ் ரசிகர்கள் மனதில் உருவாக்கி விட்டார். சுல்தான் படத்திற்கு முன்பே தெலுங்கில் இவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தின் பாடல்கள் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரின் மனதிலும் இடம்பிடித்து விட்டார்.

வீடுகளாக வாங்கும் ராஷ்மிகா
தெலுங்கில் பட வாய்ப்புக்கள் குவிந்த சமயத்தில் ஐதராபாத்தில் புதிதாக வீடு வாங்கிய ராஷ்மிகா, தற்போது இந்தியிலும் பட வாய்ப்புக்கள் அதிகம் வருவதால் மும்பையிலும் வீடு வாங்கி உள்ளார். சமீபத்தில் தான் தனது செல்ல நாய் அராவுடன் இந்த வீட்டில் குடியேறினார் ராஷ்மிகா.

பல மொழிகளில் பிஸி
பாலிவுட்டில் தற்போது குட்பை, மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அதோடு தெலுங்கிலும் ஆடவாலு மீகு ஜோஹார்லு என்ற படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழிலும் சில படங்களில் நடிக்க ராஷ்மிகாவிடம் பேசப்பட்டு வருகிறது.

20 மில்லியன் ஃபாலோவர்கள்
தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன்களால் சினிமாவில் மட்டுமல்ல சோஷியல் மீடியாவிலும் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ளார் ராஷ்மிகா. தற்போது இன்ஸ்டாகிராமில் மிக அரிதான சாதனையாக கருதப்படும் 20 மில்லியன் ஃபாலோவர்களை பெற்றுள்ளார் ராஷ்மிகா. தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக ஃபாலோவர்களை வைத்திருக்கும் நடிகை இவர் தான்.

ஒரு மாதத்தில் ஒரு மில்லியனா
இது மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஜுலை மாதத்தில் ராஷ்மிகாவை பின்தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 19 மில்லியனாக இருந்தது. ஆனால் தற்போது ஒரே மாதத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் அதிகரித்து. இது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
Recommended Video

யாருக்கு எவ்வளவு ஃபாலோவர்கள்
அதிக ஃபாலோவர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகளில் ராஷ்மிகா தான் டாப். இவரைத் தொடர்ந்து 19.2 மில்லியன் ஃபாலோவர்களுடன் காஜல் அகர்வால் இரண்டாவது இடத்தில் உள்ளார். சமந்தாவுக்கு 18 மில்லியன் ஃபாலோவர்களும், ரகுல் ப்ரீத் சிங்கிற்கு 17.3 மில்லியன் ஃபாலோவர்களும், ஸ்ருதி ஹாசனுக்கு 17.2 மில்லியன் ஃபாலோவர்களும், கீர்த்தி சுரேஷுக்கு 10 மில்லியன் ஃபாலோவர்களும் உள்ளனர்.

கொண்டாடும் ரசிகர்கள்
இதற்காக ராஷ்மிகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications